தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“கர்ம ஸ்ரீ” திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் மேற்கு வங்க அரசு அறிவிப்பு

21 Dec 2025, 3:21 pm
“கர்ம ஸ்ரீ” திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் மேற்கு வங்க அரசு அறிவிப்பு
<p><strong>&ldquo;கர்ம ஸ்ரீ&rdquo; திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் மேற்கு வங்க அரசு அறிவிப்பு</strong></p> <p>நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர் &nbsp;கால கூட்டத் தொடரில் மோடி &nbsp;அரசு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு &nbsp;உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) &nbsp;இருந்து மகாத்மா காந்தியின் பெயரை &nbsp;நீக்கிவிட்டு, அதற்கு &ldquo;விபி ஜி ராம் ஜி&rdquo; &nbsp;என்று மதச்சாயலில் பெயரை மாற்றி யுள்ளது. மோடி அரசின் இந்த அடா வடிக்கு நாடு முழுவதும் கடும் கண்ட னங்கள் கிளம்பியுள்ளன. மகாத்மா காந்தி &nbsp;மீண்டும் ஒரு முறை ஆர்எஸ்எஸ் - பாஜக வால் கொல்லப்பட்டுள்ளார் என &ldquo;இந் &nbsp;தியா&rdquo; கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன. இந்நிலையில், தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்ப்புத் &nbsp;தெரிவிக்கும் விதமாக, மேற்கு வங்க &nbsp;அரசு &ldquo;கர்ம ஸ்ரீ&rdquo; திட்டத்திற்கு மகாத்மா &nbsp;காந்தி பெயரை சூட்டியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,&rdquo;தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரி யாதை செலுத்தத் தவறினால், நாங்கள் &nbsp;அதைச் செய்வோம். தேசத் தந்தையின் &nbsp;பெயரையே நீக்குவது மிகுந்த அவமான மாக இருக்கிறது. அதனால் மாநில வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான &ldquo;கர்ம &nbsp;ஸ்ரீ&rdquo; திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை &nbsp;சூட்டியுள்ளோம்&rdquo; என அவர் கூறினார். &ldquo;கர்ம ஸ்ரீ&rdquo; திட்டம்? 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் &nbsp;58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க &nbsp;வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவை யில் உள்ளது. ஒன்றிய அரசு நிதி வழங்காத &nbsp;நிலையில், மேற்கு வங்க அரசு தனது &nbsp;சொந்த நிதியைக் கொண்டு 2024 ஆம் &nbsp;ஆண்டு &ldquo;கர்ம ஸ்ரீ&rdquo; திட்டத்தைத் தொடங்கி யது. இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் &nbsp;வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.