அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பல்
12 Jun 2026, 8:26 pm

அரசுக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பல்

மேற்குவங்க மாநிலம் கொல் கத்தாவின் அலிப்பூர் பகுதி யில் உள்ள அரசு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக அம்மாநில பாஜக அமைச்சர் கவுஷிக் சௌத்ரி ஒப்புக்கொண்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம், பிற அரசுத் துறைகள் இயங்கி வரும் 9 மாடி கட்டடத்தில் புதனன்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து தொடர்பாக தீயணைப்பு, அவசரக்கால சேவைகள் துறை இணை அமைச்சரான கவுஷிக் சவுத்ரி கூறுகையில், “இந்த சம்பவம் ஒரு சாதாரண தீ விபத்து போலத் தெரியவில்லை. இதற்குப் பின்னணியில் ஏதேனும் சதிவேலை இருக்கலாமா என்ற கோணத்தில் அதி காரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உருவான தீ நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மாடிகளைப் பெரிதாகப் பாதிக்காமல், நேரடியாக ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளுக்குப் பரவியுள்ளது. இந்த ஆண்டு நடை பெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்த லின் போது, 10 சட்டமன்றத் தொகுதி களில் பயன்படுத்தப்பட்ட 4,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தான் இவை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் நிறைவு பெற்ற, மேற்கு வங்க தேர்தல் முடிவு தொடர்பாக இன்னும் சர்ச்சை அடங்கவில்லை. இத்தகைய சூழலில், அரசு கட்டடத்தில் பயங்கர தீ விபத்தால் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானதாக அம்மாநில அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

பாஜக குற்றம்சாட்ட காரணம் இதுதான்

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து செயல்படும் தெற்கு 24 பர்கா னாஸ் மாவட்ட ஊராட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், இந்த மாவட்டம் திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் அரசியல் கோட்டையாகவும் கருதப்படுகிறது. இதனால் தான் பாஜக அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார்.