தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா? தூய்மைப்பணி போராட்டம் மூலம் அம்பலமானது

14 May 2026, 8:40 pm
மேற்கு வங்க அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா? தூய்மைப்பணி போராட்டம் மூலம் அம்பலமானது

மேற்கு வங்க அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா? தூய்மைப்பணி போராட்டம் மூலம் அம்பலமானது

மேற்கு வங்க அரசு நிதி நெருக்கடியிகொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் பான்ஸ்பேரியா நக ராட்சியில் தூய்மைப் பணியாளர்க ளுக்குச் சம்பளம் வழங்கப்படாததை கண்டி த்து போராட்டம் நடைபெற்றது.

கடந்த 2 நாட்களாக நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணி யாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் தங்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

கடந்த மாதத்திற்கான சம்பளம் கூட இன்னும் கிடைக்கவில்லை. விதிமுறைப்படி விடுமுறை கள் வழங்கப்படுவதில்லை.

விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆனால் அதற்காக கூடுதல் ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

பல்வேறு கணக்குகளில் பிடித்தம் செய் யப்படும் பணம் எங்கள் வங்கிக் கணக்கு களில் சேருவதில்லை.

எங்களது ஒரே கோரிக்கை, குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்படாதவாறு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அ

துவரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்” என்று உரக்கக் கூறினர்.

நிதி இல்லையாம் இந்த போராட்டம் குறித்து நகராட்சித் தலை வர் தபஸ் முகர்ஜி (திரிணாமுல்) கூறுகை யில், “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை கள் நியாயமானவை தான்.

ஆனால் நகராட்சி யில் பல நிதி நெருக்கடிகள் உள்ளன.

பணியா ளர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முயற்சி செய்து வருகிறோம்” என மழுப்பலாகக் கூறினார்.

பான்ஸ்பேரியா நகராட்சி மாநில தலை நகர் கொல்கத்தாவிற்கு மிக அருகில் உள்ளது.

தலைநகருக்கு அருகே உள்ள பான்ஸ்பேரியா வில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவே நிதி நெருக்கடி என்றால், மாநிலத்தின் மற்ற உள்ளாட்சி நிர்வாகம் எந்த நிலையில் இருக்கும் என கேள்வி எழுகிறது.

ஒட்டுமொத்த மேற்கு வங்க நிர்வாகமே நிதி நெருக்கடியில் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

ல் உள்ளதா? தூய்மைப்பணி போராட்டம் மூலம் அம்பலமானது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.