முந்தய பக்கம்

மேற்கு வங்க இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல்! - பிற்பகல் 1 மணி நிலவரம்

29 Apr 2026, 2:44 pm
மேற்கு வங்க இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல்! - பிற்பகல் 1 மணி நிலவரம்

மேற்கு வங்க இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 61.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 152 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 93.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து, 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலை பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 61.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக பூர்வ வர்தமான் மாவட்டத்தில் 66.8% வாக்குகள் பதிவு. இதை தொடர்ந்து, ஹூக்ளி - 64.57% வாக்குகளும், நதியா - 61.41% வாக்குகளும், ஹவுரா - 60.68% வாக்குகளும், வடக்கு கொல்கத்தா - 60.18% வாக்குகளும், தெற்கு கொல்கத்தா - 57.73% வாக்குகளும், வடக்கு 24 பர்கானாக்கள் - 59.20% வாக்குகளும், தெற்கு 24 பர்கானாக்கள் - 58.58% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram