மேற்கு வங்கம்: சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்
7 hours before

மேற்கு வங்கத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா மீது பாஜக-ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மேதினிப்பூரில், நில உரிமைக்கான மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர் தபஸ் சின்ஹா, பாஜக-ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த தபஸ் சின்ஹாவுக்கு வலது தோள்பட்டையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஜூ கிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர் சஞ்சய் புடதுண்டா ஆகியோர் தபஸின் இல்லத்திற்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.