தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத்தில் நான் மட்டும் தனியாக இல்லை; என் பின்னால் கட்சியும், மக்கள் அமைப்புகளும் உள்ளன மேற்கு வங்க சிபிஎம் எம்எல்ஏ முஸ்தாபிஜுர் ரஹ்மான் பேச்சு

14 May 2026, 8:49 pm
சட்டமன்றத்தில் நான் மட்டும் தனியாக இல்லை; என் பின்னால் கட்சியும், மக்கள் அமைப்புகளும் உள்ளன மேற்கு வங்க சிபிஎம் எம்எல்ஏ முஸ்தாபிஜுர் ரஹ்மான் பேச்சு

சட்டமன்றத்தில் நான் மட்டும் தனியாக இல்லை; என் பின்னால் கட்சியும், மக்கள் அமைப்புகளும் உள்ளன மேற்கு வங்க சிபிஎம் எம்எல்ஏ முஸ்தாபிஜுர் ரஹ்மான் பேச்சு

கொல்கத்தா நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் டோம்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் முஸ்தாபிஜுர் ரஹ்மான் அபார வெற்றி பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்க சட்டமன்றத்தில் உறுப்பினர் கணக்கை சிபிஎம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சட்டமன்றத்தில் நான் மட்டும் தனியாக இல்லை ; என் பின்னால் கட்சியும், மக்கள் அமைப்புகளும் உள்ளன என சிபிஎம் எம்எல்ஏ முஸ்தாபிஜுர் ரஹ்மான் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‘கணசக்தி’ டிஜிட்டல் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி யில்,“போராட்டம் கடினமானதுதான், ஆனால் என்னால் அதை எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், சட்டமன்றத்தில் நான் மட்டும் தனி யாக இல்லை; என் பின்னால் எனது கட்சி யும், 365 நாட்களும் வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் அமைப்புகளும் உள்ளன. இந்த போ ராட்டம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவின் நாடகப் போராட்டம் அல்ல. இது உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம்; புலம்பெயர் தொழிலாளர்களின் போராட்டம்; தொழிற்சாலைகளின் உரிமைக்கான போ ராட்டம் ஆகும். இந்த மக்களின் குரலை நான் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வேன்.

ஊழல் - அதிருப்தி

மாநிலத்தில் நிலவும் திரிணாமுல் காங்கிர ஸின் ஊழல், முறைகேடுகளால் மக்கள் விரக்தி யில் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பிலேயே மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். டோம்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அனிசுர் ரஹ்மான் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதே எனது முதல் பணி. இதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. டோம்கல் தொகுதியில் மட்டும் சுமார் 25,000 புலம் பெயர் தொழிலா ளர்கள் உள்ளனர். கேரளம் போன்ற மாநிலங்க ளில் வேலை செய்யும் தனது தொகுதி மக்க ளுடன் நான் எப்போதும் தொடர்பில் இருக்கி றேன். புதிய அரசு மதம் மற்றும் கோவில்-மசூதி அரசியலை விட்டுவிட்டு, வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு தொழில்களைத் தொடங்க வேண்டும். இடதுசாரி முன்னணியின் முழக்க மான “விவசாயமே அடிப்படை, தொழில்துறை யே எதிர்காலம்” என்பதை முன்வைத்து சட்ட மன்றத்தில் செயல்படுவேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய மூன்றிற்கும் முன்னு ரிமை அளிக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.