மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள்
3 Nov 2026, 11:19 pm
<p><strong>மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள்</strong></p><p>மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. முஸ்லிம் மக்களை போல கிறிஸ்தவர்கள் மீதும் ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் தொடர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் நாராயணதலா அருகே புதிதாக தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சனிக்கிழமையன்றுநடைபெற்றது. ஆயர் சுப்ரதா சக்கரவர்த்தி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் தேவாலயத்திற்குள்புகுந்து கட்டிடத்தைச் சேதப்படுத்தி, சிலுவையை உடைத்து, விழாவில் கலந்துகொண்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.தாக்குதல் நடத்தியவர்கள் பெண்களையும் இலக்கு வைத்து, திருமணமான பெங்காலி (வங்காளம்) இந்துப்பெண்கள் அணியும் பாரம்பரியச் சின்னமான ‘சாகா’ வளையல்களைக் கழற்றுமாறு கோரி, அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றினர். தாக்குதலைப் பதிவுசெய்ய முயன்றவர்களின் மொபைல்போன்களும் அடித்து நொறுக்கப்பட்டன.இறுதியாக, இனிவரும் நாட்களில் தேவாலயத்தில் எந்தவொரு மதச் சடங்குகளும் நடக்கவிடாமல் தடுப்போம்என்று இந்துத்துவா கும்பல் கூச்சலுடன் மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப்பின்னரே செய்தியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>
