மேற்குவங்க பாஜக அரசின்பிரித்தாளும் சூழ்ச்சி
yesterday

மேற்குவங்க பாஜக அரசின்பிரித்தாளும் சூழ்ச்சி

மேற்கு வங்க மாநிலம் பங்குரா நகராட்சியில், நாள்தோறும் உழைப்பை மட்டுமே நம்பி பிழைப்புநடத்தும் ஏழைப் பெண்களுக்கு நேர்ந்துள்ள அவமானம், தனிப்பட்ட ஒரு மதச் சமூகத்திற்கு எதிரானதாக்குதல் மட்டுமல்ல; அது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் வலதுசாரி வகுப்புவாத பாசிசத்தின் கோர முகமாகும்.

ரயில்வே சரக்கு முனையங்களிலும், சந்தைகளிலும் மூட்டை தூக்கியும் தினக்கூலி வேலை செய்தும் வாழ்க்கையை நகர்த்தும் கேதர்தாங்கா பகுதி மக்கள்,போதிய வேலையோ நிலையான வருமானமோ இல்லாத சூழலில்தான் அரசு அறிவித்த ‘அன்னபூர்ணா’ நிதி உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் என்பது ஏழைகளுக்கு வழங்கப்படும்பிச்சையல்ல; மாறாக, உழைக்கும் மக்களின் உழைப்பால் இயங்கும் இந்த நாட்டின் கருவூலத்திலிருந்து பெறப்பட வேண்டிய அடிப்படை உரிமை.

ஆனால், அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணத்தைக் கேட்டு சென்ற எளியபெண்களிடம், “முதலில் இந்துப் பெண்களுக்குத் தான் பணம், அதன்பிறகுதான் முஸ்லிம்களுக்கு” என்றும், “எங்களுக்கு வாக்களிக்காததால் உங்கள்பிரச்சனை அப்புறம்தான் பரிசீலிக்கப்படும்” என்றும் பாஜக எம்.எல்.ஏ நிலாத்ரி சேகர் தனா பேசியிருப்பது, ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும்சூழ்ச்சியாகும். பட்டினியால் வாடும் பெண்களிடம்‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி மிரட்டுவதும், ஆதரவாளர்களை விட்டு அச்சுறுத்து வதும், உழைக்கும் மக்களின் பசியையும் வறுமையையும் மூலதனமாக்கி மதவெறியைத் தூண்டுவதும் கேவலமான செயலாகும்.

மற்றொரு புறம், இந்த அநீதிக்குத் துணைபோன அரசு அதிகாரிகளின் ஆளும் வர்க்கச் சார்புநிலை கடும் கண்டனத்திற்குரியது. உதவி கோரி வந்த முஸ்லீம்ஏழைப் பெண்களின் விண்ணப்

பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதை விடுத்து, அவர்களை ‘சேவா சேது’ முகாமிற்கும், எம்.எல்.ஏவின்அலுவலகத்திற்கும் அலைக்கழித்து அலட்சியப்படுத்தியதில் எஸ்டிஓ உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அராஜகம் அப்பட்டமாகத் தெரிகிறது.

பசிக்கும் வறுமைக்கும் மதமோ சாதியோ கிடையாது. ஆளும் வர்க்கமும் முதலாளித்துவ அமைப்பும் பாட்டாளி மக்களின் உழைப்பைச் சுரண்டுவதில் எவ்விதப்பாகுபாடும் காட்டுவ தில்லை. ஆனால், அந்தச் சுரண்டலுக்கு எதிராகஉழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ‘இந்து - முஸ்லிம்’ என்ற மதப்பிளவை உருவாக்கி, ஏழை மக்களின் போராட்டகுணத்தை மழுங்கடிக்க வலதுசாரி சக்திகள் முயல்கின்றன.

பங்குராவில் அவமானப்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களின் போராட்டம் என்பது வெறும் 30 பெண்களின் பிரச்சனை மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியாதைக்கான போராட்டம். மதத்தைக் காட்டி உரிமைகளைப் பறிக்கும் பாசிசப் போக்கையும், அதிகாரவர்க்கத்தின் அலட்சியத்தையும் எதிர்த்து அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும், அமைப்புகளும் ஒன்றுதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்.