மேற்கு வங்கத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி
17 May 2026, 9:44 pm

மேற்கு வங்கத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி

கொல்கத்தா பாஜக ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் பாங்குரா மாவட்டத் தில் உள்ளது ஜெய்ப்பூர் கிராமம்.

இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகி (21வயது) ஒருவர், 7 வயது சிறு மிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவ தாக ஆசை வார்த்தை கூறி அழைத் துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கொடூர காயங்களுடன் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலியல் குற்றவாளி பாஜக வைச் சேர்ந்தவர் என்பதால், அவரை காப்பாற்ற இந்த விவகா ரத்தை மூடி மறைக்க காவல்துறை முயன்றது.

ஆனால் பாஜக குண்ட ரின் இந்த பாலியல் அட்டூழியத்தை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் போராட் டம் நடத்தினர்.

மேலும் மாதர் சங் கத்தின் மேற்கு வங்க மாநிலச் செய லாளர் மோனாலிசா சின்ஹா, மாவ ட்ட நிர்வாகிகளுடன் இணைந்து காவல் நிலையத்தில் குற்றவா ளிக்கு முன்மாதிரியான கடுமை யான தண்டனை வழங்கக் கோரி மனு அளித்தனர்.

அதன்பின்னரே பாங்குரா மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து பாஜக நிர்வாகியை கைது செய்துள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான முழுமையான சட்ட உதவிகளை மாதர் சங்கத்தினர் வழங்குவதாக உறுதியளித்தனர்.