தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்குவங்கத்தில் பள்ளிக்கூடங்களை விற்பனை செய்யும் பாஜக அரசு

23 Sept 2026, 9:00 pm
மேற்குவங்கத்தில் பள்ளிக்கூடங்களை விற்பனை செய்யும் பாஜக அரசு

மேற்குவங்கத்தில் பள்ளிக்கூடங்களை விற்பனை செய்யும் பாஜக அரசு

4,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு

கொல்கத்தாமேற்கு வங்கத்தில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு சொத்துக்களைவிற்பனை செய்ய அம்மாநில பாஜக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுதொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் பிறப் பித்துள்ள உத்தரவில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் இதற்கான சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். இக்குழுவில் மாவட்டக் கல்வி அதிகாரி, பள்ளி ஆய்வாளர் ஆகியோர் இடம் பெறுவர். இக்குழுவினர் மாணவர்களே இல்லாத பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங் குள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளைப் பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஒரு மாணவர் கூட சேராத ‘பூஜ்ய சேர்க்கை’ (Zero-enrolment) கொண்ட பள்ளிகளை விற்பனை செய்யப் போவதாக அம்மாநில அரசும் கூறியுள்ளது.

இப்பள்ளிகளை மீண்டும் சீரமைத்து அரசு சார்பில் நடத்துவதற்குப் பதிலாக, பொது-தனியார் பங்களிப்பு (PPP) மாடலில் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் வெளியான கல் விக்கான ஒருங்கிணைந்த மாவட் டத் தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 5,663 பூஜ்ய சேர்க்கை பள்ளிகளில் 4,133 பள்ளிகள் மேற்கு வங்கத்தில்தான் உள்ளன எனத் தெரியவந்தது.இந்தப் பள்ளிகளில் தற்போது 19,052 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் முற்றிலும் மூடப்பட்டால் இத்தனை ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நிலை என்னவாகும்? அவர்கள் வேறுபள்ளிகளுக்கு மாற்றப்படுவார்களா அல்லது பணிநீக்கம் செய் யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் (TMC) ஆட்சியிலும் இதுபோன்ற பிபிபி மாடலைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய மாணவர் சங்கம் (SFI) உள்ளிட்ட இடதுசாரிமாணவர் மற் றும் ஆசிரியர் அமைப்புகள் நடத் திய தீவிர போராட்டங்கள் காரணமாக அந்த முடிவு அப்போது கைவிடப்பட்டது.

தற்போது அமைந்துள்ள இரட்டை என்ஜின் பாஜக அரசு மாணவர்கள் பள்ளிகளில் சேராத நிலையில் அதற்கான காரணங் களை ஆய்வு செய்து மாணவர் களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்து கல்விக் கட்டமைப்புகளை பாதுகாப்பதற்குப் பதிலாகத் தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்காகச் செயல்படுகிறது என விமர் சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய சிஏஜி (CAG) அறிக் கையின்படி, மேற்கு வங்கத்தில் உயர் தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் மாணவர்களில் 28 முதல் 42 சதவிகிதமானவர்கள் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். இந்த இடைநிற்றலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப் பைப் பறிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகக் கல்வி ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித் துள்ளனர்.

தற்போது பாஜக அரசின் இந்தக் நடவடிக்கையைக் கண்டித்து, “பள்ளியைக் காப்போம் - அடித் தளத்தைக் காப்போம்” (School Bachao Mool Bachao) என மாநிலம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச் சரத்தையும் போராட்டத்தையும் இந்திய மாணவர் சங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.