மாடுகளை கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பாஜக அரசின் அறிவிப்பால் பதற்றம்
18 May 2026, 9:20 pm

மாடுகளை கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பாஜக அரசின் அறிவிப்பால் பதற்றம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத சூழலில், அதன் அறிவிப்புகளால் ஒட்டு மொத்த மாநிலமே பதற்றமாகக் காணப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக பதவியேற்று 10 நாட்களே ஆகியுள்ளது. கடந்த வாரம் விலங்குகளை அறுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இறைச்சி விற்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டன.

இதற்கு மேற்கு வங்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வாகனங்களில் பசு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை பரிசோதனை செய்யும் போது, பசுக்களின் “பிறப்புச் சான்றிதழ்கள்” கேட்கப்படும் என பாஜக எம்எல்ஏ ரேகா பாத் ரா அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கால் நடை ஒழுங்குமுறைச் சட்டங் கள் மூலம் புதிய வழிகாட்டு தல்களின் படி, 14 வயதுக்குட் பட்ட பசு மாடுகளை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என மிரட்டல் விடுத்துள் ளார்.

நாட்டில் மனிதனுக்கே பிறப்புச் சான்றிதழ்கள் வாங் குவது கடினமான சூழலில், பாஜக ஆளும் மேற்கு வங்கத் தில் பசு மாடுகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்கும் அறிவிப்பு க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. குறிப்பாக கொல்கத்தா, ஹவுரா உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகு திகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து, பசுக்களுக்காக வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழைப் பெற்று வருமாறு ரேகா பத்ராவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இது மேற்கு வங்க மக்க ளுக்கு ஒரு குறிப்பாக எடுத்துக்கொள்ள உதவி யாக இருக்கும்.

ஒரு வேளை பாஜகவினர் அப் படி ஒரு பசுவின் பிறப்புச் சான்றிதழைக் காட்டி னால், அந்த சான்றிதழ்க ளுக்கு யார் அங்கீகாரம் அளித்தது என்பதையும் மக்கள் சரிபார்க்க வேண்டும் திரிணாமுல் எம்.பி., குணால் கோஷ்