மேற்கு வங்கம்: எஸ்.எப்.ஐ பேரணியில் பாஜக குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்!
3 Oct 2026, 9:59 pm

மேற்கு வங்கம்: எஸ்.எப்.ஐ பேரணியில் பாஜக குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்!

கொல்கத்தாபாஜக ஆளும் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டம் பீரட்டி பகுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைராஜினாமா செய்யக் கோரி காவல்துறையின் அனைத்து முறையான அனுமதியோடு இந்திய மாணவர் சங்கத்தின்(எஸ்.எப்.ஐ) சார்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கத்தில், பாஜக குண்டர்கள் ஒலிபெருக்கியைத் துண்டித்தும், எஸ்.எப்.ஐ செயற்பாட்டாளர்களை மிரட்டும் சதிவேலைகளில் ஈடுபட்டனர். எனினும்,பேரணி சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புகுந்த பாஜக குண்டர்கள், மேடையைச் சேதப்படுத்தியதுடன், இரும்புக்கம்பிகள் மற்றும் குழல் விளக்குகளைக் கொண்டு எஸ்.எப்.ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீதும்மிருகத்தனமான தாக்குதல் நடத்தினர். மாணவர் சங்க முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீப்சிதா தார் மீதும் ஒரு நாற்காலி வீசப்பட்டது.

15 பேர் காயம்இந்தத் தாக்குதலில் 15 எஸ்.எப்.ஐ தலைவர்களும், உறுப்பினர்களும் காயமடைந்தனர். செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்க முயன்ற மாவட்டக் குழுஉறுப்பினர் சிவ்சங்கர் கோஷ் தலையில் தாக்கப்பட்டு, அவருக்கு 5 தையல்கள் போடப்பட்டன. அதேபோன்று, சுவங்கர் தாசுக்குக் கண்பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 8 செயற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் மேல்சிகிச்சைக்காகக் கொல்கத்தா அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், மகாத்மா காந்தி பிறந்தநாளன்றும்கூட பாஜககுண்டர்கள் காந்தியின் படத்தைக் கூட விட்டுவைக்காமல், அதனைத் தரையில் அடித்து நொறுக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள்இன்னும் கைது செய்யப்படாத நிலையில், மாவட்டச் செயலாளர் உள்ளிட்டமூன்று எஸ்.எப்.ஐ செயற்பாட்டாளர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, மாவட்டச் செயலாளர் பலாஷ் தாஸ், மாநிலக் குழுஉறுப்பினர்கள் அத்ரேயி குஹா,கார்கி சாட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாஜக குண்டர்களின் இந்த அடாவடி செயலுக்குக்கண்டனம் தெரிவித்தனர்.