மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு
25 Sept 2026, 10:43 pm

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

கொல்கத்தாமேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் மோசமான அளவில்அதிகரித்துள்ளதாக ‘இந்தியா ஹேட் லேப்’ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு, அதாவது 2026ஆம் ஆண்டு மே முதல்செப்டம்பர் 20ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிறிஸ்துவர்களின் தனிப்பட்ட பிரார்த்தனை கூட்டங்கள், வீடுகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை இலக்கு வைத்து சுமார் 60 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, இந்துத்துவ அமைப்புகளுக்கு அளித்த ஆதரவு மற்றும் உத்தரவுகாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

பதிவான 60 சம்பவங்களில், 52 சம்பவங்கள் திடீர் சோதனைகள் (அரசு, பாஜகவினர், இந்துத்துவா கும்பலின் சோதனை) சார்ந்தவையாகவும்; 8 சம்பவங்கள் உடலளவிலான தாக்குதல்கள்,வன்முறை மற்றும் தேவாலயச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாகவும் உள்ளன.

மேலும் கிறிஸ்துவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட 5 பொது வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளும், மதமாற்றக் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட 3 வன்முறை கலந்த போராட்டங்களும் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு24 பர்கானா மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகியமாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 13 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்து ஜாகரன் மஞ்ச், வங்கீய இந்து ஜாகரன், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி), பஜரங் தள், இந்து சுரக்சா சமிதி, இந்து ஏகதா மஞ்ச் மற்றும் இந்து சங்கதி ஆகியஅமைப்புகள் மேற்கு வங்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையில் அடிக்கடிஈடுபட்டுள்ளன. இந்த இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பிரார்த்தனை நடக்கும் இடங்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பங்கேற்பாளர்களின் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்புவதும், மதமாற்றம் செய்வதாகக் குற்றம் சாட்டுவதும், பல நிகழ்வுகளில் அங்கிருந்தவர்களின் அடையாள அட்டைகளைச் சோதிக்குமாறு வற்புறுத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.குறிப்பாக பருய்பூரில் பைபிள் ஏந்திச் சென்ற கிறிஸ்துவப் பெண்கள் தகாத வார்த்தைகளால் துன்புறுத்தப்பட்டனர். ராமன் நகரில் பெண்களை சாகா-போலா வளையல்களை அகற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஜூன் 10 அன்று தெற்கு 24 பர்கானாஸில் உள்ள ஒரு தேவாலயம் சேதப்படுத்தப்பட்டது. ஜூலை 5 அன்று சுபாஷ்கிராமில் கட்டப்பட்டு வந்த தேவாலயம் தாக்கப்பட்டு சிலுவைகள்உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் எல்லாம் பாஜக அரசின் முன்னிலையில் நடைபெற்றது என்று கூட கூறலாம்”என அதில் கூறப்பட்டுள்ளது.