தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெலிங்டன் ராணுவ மையம், பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

3 Jul 2026, 1:17 am
வெலிங்டன் ராணுவ மையம், பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
<p><strong>வெலிங்டன் ராணுவ மையம், பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்</strong></p><p>உதகை, ஜூலை 2- உதகை அரசு தொழில்நுட்ப கல்வியுடன், ராணுவ தலை மைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேசிய சேவையோடு இணைக் கும் நோக்கில், வெலிங்டன் ராணுவ மையம், கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டனிலுள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்துடன், கேத்தி பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழனன்று கையெழுத் திடப்பட்டது. இந்த ஒப்பந்தம், தொழில்நுட்பக் கல்வியுடன் ராணுவத் தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேசிய சேவையோடு இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த நிகழ்வில், சிஎஸ்ஐ கோவை மறை மாவட்ட ஆயர் ரெவ் எஸ்.பிரின்ஸ் கால்வின் மற்றும் எம்ஆர்சி கமாண்டென்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் முன்னிலையில், கல்லூரியின் இயக்குநர் பி.டி.அருமை ராஜ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தின் உதவி கமாண்டென்ட் கையெழுத்திட்டனர். இதுகுறித்து கிருஷ்ணேந்து தாஸ் கூறுகையில், இந்த ஒப் பந்தத்தின் கீழ் பாதுகாப்புத்துறை சேர்க்கை உதவித்தொகை, ஆராய்ச்சி மற்றும் புதுமை, பயிற்சி வேலைவாய்ப்பு, வெலிங் டன் ராணுவ மையம், கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாடு, ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி கள், சேர்க்கை உதவி மற்றும் கூட்டு விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்க ளுக்கு தொழில்நுட்ப திறன்களுடன் தலைமைத்துவம், ஒழுக் கம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்க ஒரு தனித்துவ மான வாய்ப்பை வழங்கும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.