நலவாரியப் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்: தையல் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>நலவாரியப் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும்: தையல் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.17- நலவாரியப் பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டை தொழிலாளர் ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தையல் தொழிலாளர்களைப் பாதுகாத்திடவும், கட்டுமானத் தொழிலாளர்களைப் போல தையல் தொழிலாளர்களுக்கும் நலவாரிய பணப் பயன்களை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு பிப்.17 அன்று தமிழக முதல்வருக்கு கடிதம் மூலமாக சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டது. அதன் நகலை புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் ஆணையரிடம் செவ்வாய் கிழமை சங்கத்தின் சார்பில் நேரில் வழங்கப்பட்டது. தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.மாரிக்கண்ணு கோரிக்கை மனுவை அளித்தார். சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
