முந்தய பக்கம்

செருபாலக்காடு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

16 Dec 2025, 3:51 pm
செருபாலக்காடு அரசு தொடக்கப் பள்ளி  மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
<p><strong>செருபாலக்காடு அரசு தொடக்கப் பள்ளி &nbsp;மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p> <p>தஞ்சாவூர், டிச.15- &nbsp;துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருபாலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் 41 பேருக்கு எவர்சில்வர் வாட்டர் பாட்டில், அங்கன்வாடி குழந்தைகள் 13 பேருக்கு கலர் பென்சில், வரைபடம் ஆகியவற்றை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சங்கீதா வரவேற்க, 5 ஆம் வகுப்பு மாணவி பா. பாலஜனனி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram