முந்தய பக்கம்

ரூ.20.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

17 Nov 2025, 4:40 pm
ரூ.20.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
<p><strong>ரூ.20.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p> <p>சேலம், நவ.17- சேலத்தில் நடைபெற்ற அனைத் திந்திய கூட்டுறவு வார விழாவில், 2,593 &nbsp;பயனாளிகளுக்கு ரூ.20.08 கோடி மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை சுற்று லாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வழங்கினார். 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு &nbsp;வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கி சமுதாயக் கூடத்தில் திங்க ளன்று நடைபெற்றது. இவ்விழாவில், 2,593 பயனாளிகளுக்கு ரூ.20.08 கோடி &nbsp;மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந் திரன் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டு களில் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் &nbsp;ரூ.5,052 கோடி மதிப்பிலான கடனுதவி கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டத்தில் ரூ.835 கோடி &nbsp;பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு, கூட்டு றவு சங்கங்களில் நகைக்கடன் ரூ.483 &nbsp;கோடி தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுக்களில் ரூ.132 கோடி கடன் தள்ளு படியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள பொது விநி யோகத்திட்டத்தில் 11,11,370 குடும்ப அட்டைதாரர்களுக்கு 21,642 மெட்ரிக் டன் அளவிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த நான்கரை ஆண்டு களில் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 20 &nbsp;வகையான கடன்களின் வாயிலாக ரூ.21856 கோடி அளவில் மொத்தமாக கடன் வழங்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தா தேவி, சட்டமன்ற உறுப்பி னர்கள் ரா.அருள், எஸ்.சதாசிவம், மாந கராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் மா.சாரதாதேவி, சேகோசர்வ் மேலாண் இயக்குநர் ஆர்.கீர்த்தி பிரிய தர்ஷினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் &nbsp;மேலாண்மை இயக்குநர் குழந்தை வேலு, மண்டல கூட்டுறவுச் சங்கங்க ளின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram