பல்லடம் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>பல்லடம் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய அலுவலகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பல்லடம் சட்ட மன்றத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் க. செல்வராஜ் நேரில் வருகை தந்து ஆதரவு திரட்டினார். பல்லடம் ஜெயபிரகாஷ் வீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்நிகழ் வில் வேட்பாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.பரமசிவம், சா.பிரவீன் குமார், கமிட்டி உறுப்பினர்கள் முருகேஷ், மோகன், கே.வி.சுப்பிரமணி, ராஜேந்திரன், துரைசாமி உட்பட கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். அவரு டன் திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆர். குமார், ஒன்றியச்செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சோமசுந்தரம், சீனிவாசன், நகர செய லாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டு ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
