முந்தய பக்கம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை  சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

15 Feb 2026, 3:03 pm
மத்திய தொழில் பாதுகாப்புப் படை  சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
<p><strong>மத்திய தொழில் பாதுகாப்புப் படை &nbsp;சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு</strong></p> <p>கடலூர், பிப். 15- &nbsp;கடலூர் மஞ்சகுப்பம் ஆள்பேட்டை சோதனைச் சாவடி பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) சார்பில் &nbsp;கடலோரப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப் புணர்வு குறித்து நடத்தப்பட்ட சைக்கிள் பேரணிக்கு உற்சாக &nbsp;வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜனவரி 28-ம் தேதி &nbsp;தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியை வந்தடைந்தது. அங்கிருந்து ஞாயிறன்று (பிப். 15) கடலூ ருக்கு வந்தடைந்தனர். கடலூர் வர்த்தகச் சங்கத் தலைவர் துரைராஜ் தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 130 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பங்கேற்றனர். இதில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மிஸ்ரா, செல்வம், சஞ்சய் சிங், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கடலூர் டிஎஸ்பி தமிழ் இனியன், வழக்கறிஞர் சன்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து &nbsp;கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram