தொடர் சாரல் மழையால் வாரச்சந்தை வியாபாரிகள் தவிப்பு
29 Nov 2025, 4:58 pm
<p><strong>தொடர் சாரல் மழையால் வாரச்சந்தை வியாபாரிகள் தவிப்பு</strong></p>
<p>நாமக்கல், நவ.29- தொடர் சாரல் மழையால் பள்ளி பாளையம் ஆவரங்காடு பகுதியில் வாராந்திர காய்கறி சந்தையில் மிகக் குறைவான அளவிலேயே வியாபாரிகள் கடைகளை அமைத் தனர். தமிழகம் முழுவதும் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் அதிக அளவு பெய்த மழை யின் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இன்னும் சில நாட்களுக்கு மழை தீவிரமாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகளின் அன்றாட வேலைகள் பாதிப்படைந் துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஆவரங்காடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட் களில் வாராந்திர காய்கறி சந்தை கூடுவது வழக்கம். சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் இந்த வார சந்தையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங் கிச் செல்வர். இந்நிலையில் சனிக்கிழமை யன்று காலை தொடங்கி மாலை வரை வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக மதிய நேரத் திலே சுறுசுறுப்பாக காணப்படும் வாரச்சந்தை பொலிவிழிந்து காணப்பட்டது. மிகக் குறைவான அளவிலேயே வியாபாரிகள் கடை களை அமைக்க வருகை தந்தனர். மேலும் எப்போதும் திறந்த வெளி யில் நடக்கும் காய்கறி சந்தை மலை பாதிப்பின் காரணமாக காய்கறிகள் சேதம் அடையாமல் இருப்பதற் காக தார்பாய்களை கட்டினர். இதுகுறித்து காய்கறி வியாபாரி கணேசன் என்பவர் கூறுகையில், மழைக்காலங்களில் வெங்காயம், தக்காளி, கீரை வகைகள், வெண் டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மழையில் நனையாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன் றாகும். ஏனெனில் இவை மழை நீர் பட் டாலே பாதிப்பு ஏற்படக்கூடிய காய் கறிகளாகவும். அது மட்டும் இன்றி பல்வேறு மளிகை பொருட்களை யும் வாராந்திர காய்கறி சந்தை யில் கொண்டு வந்து விற்பனை செய் வது வழக்கம். இப்படி பல்வேறு இடையூறுக ளுக்கு மத்தியில் தான் வாரம் தோறும் காய்கறி சந்தைக்கு வரு கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தினந்தோறும் ஆங்காங்கே உள்ள வாராந்திர காய்கறி சந்தைக்கு கொண்டு செல் கிறோம். ஒரு வார காலமாகவே சீதோசன நிலை மாறுபட்டு மழை பெய்து கொண்டே இருப்பதால் தொடர்ச்சியாக வியாபாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தைக்கு வருவதற்காக ஏற்கனவே காய்கறிகளை வாங்கி விட்டதால் வேறு வழி இன்றி மழை பெய்யும் நாள் என்று கூட பாரா மல் வாராந்திர காய்கறி கடை அமைக்க வந்துள்ளேன். என்னை போலவே வியாபாரிகள் பலரும் வந்துள்ளனர். இருந்த போதிலும் மழை தாக்கத்தின் காரணமாக வாராந்திர சந்தைக்கு வருகை தரும் கணிசமான வியாபாரிகள் வரவில்லை. மேலும் மழையின் பாதிப்பு இருந்தால் எப்போதுமே மக்கள் வரத்து குறைந்தே காணப்படும். அந்த வகையில் இனிவரும் இரண்டு மாத காலங்களுக்கு மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்பதால் எங்களுடைய வியாபா ரம் சிரமமானதாக தான் இருக்கும். ஐயப்ப பக்தர்கள் மற்றும் தை மாதத்தில் முருக பக்தர்கள் மாலையிடுவார்கள் என்பதால் காய்கறி தேவை டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அதிக ரித்து காணப்படும். அப்போது காய் கறியின் விலையில் சற்று உயர் வும் இருக்கக்கூடும் என்றார்.</p>
