தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாராந்திர குறைதீர் கூட்டம்: மக்கள் வருகை குறைவு

12 Jan 2026, 6:20 pm
வாராந்திர குறைதீர் கூட்டம்: மக்கள் வருகை குறைவு
<p><strong>வாராந்திர குறைதீர் கூட்டம்: மக்கள் வருகை குறைவு</strong></p> <p>திருப்பூர், ஜன.12- பொங்கல் பண்டிகை காரணமாக திங்களன்று நடைபெற்ற வாராந்திர மக் கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்க ளின் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் &nbsp;குறைவாக காணப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று வாராந்திரக் குறை தீர் கூட்டத்திற்கு வழக்கமான அளவில் மக்கள் வரவில்லை. &nbsp;பொங் கல் பண்டிகை காரணமாக இந்த வாரம் &nbsp;நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப் பட்டது. மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்ற இந்த &nbsp;கூட்டத்தில், அரசு கேபிள் டி.வி. ஆப ரேட்டர்கள் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, &nbsp;அரசு கேபிள் குறைந்த விலை யில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகி றது. இந்நிலையில், தனியார் கேபிள் &nbsp;டிவி.ஆபரேட்டர்களால் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தொந்தரவுக்குள்ளா வதாகவும், தற்காலிக ஊழியராக பணிபு ரியும் சிலர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனு வில், பல்லடம் கல்லம்பாளையம் பகுதி யில் 24 பேருக்கு பட்டா வழங்க ஆட்சி யர் உத்தரவிட்டும். பல ஆண்டுகளாக உத்தரவு நிறைவேற்றபடவில்லை. இது &nbsp;குறித்து பல்லடம் வட்டாட்சியரிடம் மனு &nbsp;அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே தகுதியான நபர்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் &nbsp;என &nbsp;கேட்டுக் கொண்டனர். மங்கலம் கிராம நீரினை பயன்ப டுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தினர் அளித்த மனுவில், பல்லடம் விரி வாக்க பகுதிகளான மங்கலம், பூமலூர், &nbsp;இச்சிப்பட்டி போன்ற பகுதிகளில் ஒரு &nbsp;மடை விட்டு ஒரு மடை பாசனம் சுமார் 5 &nbsp;ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற வேண் டும். 1 ஆவது மண்டல பாசனத்திற்கு வரும் 24 ஆம் தேதி பி.ஏ.பி. தண்ணீர் &nbsp;திறக்கப்படுகிறது. தற்போது வரை &nbsp;மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால் கள் சுத்தம் செய்யப்படவில்லை. எனவே இதனை உடனடியாக சுத்தம் &nbsp;செய்ய வேண்டும். நிலத்தடி நீர் குறைந் துள்ளது. இதனால் வாய்க்கால் தண் ணீரை மட்டுமே விவசாயிகள் நம்பி யுள்ளனர். எனவே மங்கலம் பாசன &nbsp;சபைக்குட்பட்ட சின்னக்காளிபாளை யம், இடுவாய், ஆட்டையம்பாளையம், &nbsp;எம்.செட்டிபாளையம், மங்கலம், &nbsp;சின்னாண்டிபாளையம் வரை உள்ள &nbsp;கிளை வாய்க்கால்களை சுத்தம் செய்ய &nbsp;வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மயானத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை: தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சூரியநல்லூர் ஊராட்சி மரவபாளையம் பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றன. மேற்கு புறத்தில் பட்டியலின மக்களுக்கு மயா னம் உள்ளது. இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. மயா னத்தை சுற்றி புதர் மண்டி உள்ளதால் இதை சீரமைக்க வேண்டும் என &nbsp;ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையி னர் மனு அளித்தனர். வேலாள் என்பவர் அளித்த மனு வில், அவினாசிபாளையத்தில் வசித்து வரும் தன்னுடைய, மகன் வடிவேலு காதல் திருமணம் செய்த நிலையில் அவரை சிலர் கொலை செய்து விட்ட னர். அவர்கள் மீது எஸ்.சி. எஸ்.டி. &nbsp;வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், &nbsp;அரசு எனக்கும் எனது மகள் லட்சுமிக்கும் &nbsp;அரசு வேலை வழங்கியுள்ளது. இருப்பி னும் மாத ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. எனவே விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் எனக் கேட்டு கொண்டிருக்கி றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.