தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

களைகட்டும் 2026 காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை!

13 Dec 2025, 5:13 pm
களைகட்டும் 2026 காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை!
<p><strong>களைகட்டும் 2026 காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை!</strong></p> <p>2025 ஆம் ஆண்டு நிறைவ டைந்து, 2026 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் குறுகிய நாட்களே உள் ளது. இந்நிலையில், நாமக்கல்லில் தினசரி மற்றும் மாதாந்திர காலண் டர் தயாரிப்புப் பணிகளும், விற்ப னையும் கணிசமாக அதிகரித்துள் ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்களும், கடை &nbsp;வியாபாரிகள், அரசியல் கட்சியினர் எனப் பலதரப்பட்டோரும் புதிய காலண்டர்களை வாங்குவதில் ஆர் வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு-நாமக் கல் சாலையில் அச்சகம் நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் கூறு கையில், &ldquo;பொதுவாகவே காலண் டர் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஊராக சிவகாசி உள்ளது. அங்கு மிகக் குறைவான விலையில் காலண்டர்கள் அச்சிடப்பட்டு ஏற் றுமதி செய்யப்படுவதால், தமிழ கம் மட்டுமின்றி பல்வேறு மாநி லங்களில் இருந்தும் ஆர்டர்கள் வரும். &nbsp;அதேபோல, இங்குள்ள அச்ச கத்திற்கும் தொடர்ந்து இந்த &nbsp;காலத்தில் பணிகள் இருக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலும், சீசன் ஆர்டரை பொறுத்து அச்சகங்களில் காலண்டர் தயா ரிப்புப் பணிகள் நடைபெறும். வரு டம் முழுவதும் இதர அச்சுப் பணி களை மேற்கொண்டாலும், டிசம்பர் மாதம் மட்டுமே புது வருடத்திற் கான காலண்டர் தயாரிப்பு இருக் கும். ஆகையால், தீபாவளிப் பண்டி கையை போலவே இந்த மாதம் எங்களுக்கு மிகவும் உற்சாகமாக வும், அதிக வேலைகளுடனும் இருக்கும். விலை நிலவரங்களைப் பொறுத்தவரை, சராசரியான அள வுகளில் உள்ள தினசரி காலண் டர்களை 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், மாதாந்திர காலண் டர்களைத் தரத்திற்கு ஏற்ப 20 &nbsp;ரூபாய் முதல் 100 ரூபாய் வரையி லும் விற்பனை செய்து வருகி றோம். டைரிகளைப் பொறுத்த வரை, கையடக்க டைரிகள் 20 ரூபா யில் தொடங்கி, தரமான டைரிகள் 500 ரூபாய் வரையிலும் கிடைக் கின்றன. காலண்டர் தயாரிப்பு அவ்வ ளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட அளவுகள், டிசைன்கள் என எது வும் கிடையாது. மிகச் சிறியது முதல் மெகா சைஸ் வரையிலான காலண் டர்கள் மற்றும் மாதாந்திர காலண் டர்களை வாடிக்கையாளர் தேவைக் கேற்ப தயாரிக்க முடியும். அரசி யல் கட்சியின் தலைவர்கள், விடு தலை போராட்ட வீரர்கள், நடிகர் கள், தெய்வங்கள், குழந்தைகள், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட உருவங்கள் குறித்த காலண்டர் களைப் பெரும்பான்மையான மக் கள் விரும்பி கேட்கின்றனர். வணிக நிறுவனங்கள், தங்கள் கடையை விளம்பரப்படுத்தும் வகையிலும், தொழில் சார்ந்த &nbsp;பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையிலும் பிரத்யேகமான ஆர் டர்களை தருகின்றனர். உதார ணத்திற்கு, சமீபத்தில் முட்டை லோகோவை முழுமையாகப் பயன்படுத்தி காலண்டர் வேண்டு மென ஒரு முட்டை விற்பனை நிலைய உரிமையாளர் ஆர்டர் கொடுத்திருந்தார். இதுபோல, பள்ளி, கல்லூரிகள், தொழிற்சா லைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தொழிலைச் சார்ந்த வர்களும் தனிப்பட்ட முறையில் ஆர்டர்கள் கொடுத்து வருகின்ற னர். அரசியல் கட்சிகள் சார்ந்த &nbsp;ஆர்டர்கள் இந்த ஆண்டு வழக் கத்தைவிட அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன் னிட்டு, அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் காலண்டர்களை ஆர்டர் செய்துள்ளனர். புதிதாகப் பொறுப்பு வாங்கியவர்களும் இந்த ஆண்டு முதல் முறையாக ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆங்கிலப் புத்தாண்டுக்கு கேக்குகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்றாலும், இந்த &nbsp;ஆண்டு அதைவிடக் காலண்டர் கள் விற்பனை மற்றும் தயாரிப்பு அதிக அளவில் உள்ளது என்பதை &nbsp;உறுதியாக கூற முடியும். தற் போது வேலைப்பளு அதிகமாக வும், நாட்கள் குறைவாகவும் உள்ள தால், ஆர்டர்களை நாங்களாகவே தற்போது குறைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளோம். அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் ஆர்டர் களை முடித்து அனுப்பி விடுகி றோம்,&rdquo; என்று அவர் தெரிவித்தார். பிறக்கும் புத்தாண்டு அனைவருக் கும் சிறப்பானதாக இருக்க வேண் டும், என்றார். -எம்.பிரபாகரன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.