நெசவாளர்கள் போராட்டம் தொடர்கிறது 16-வது நாளாக கஞ்சித் தொட்டி திறப்பு; அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சமூக வலைதளப் பதிவுக்கு கண்டனம்
26 Sept 2026, 8:53 pm

நெசவாளர்கள் போராட்டம் தொடர்கிறது 16-வது நாளாக கஞ்சித் தொட்டி திறப்பு; அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சமூக வலைதளப் பதிவுக்கு கண்டனம்

இராஜபாளையம், செப்.26-இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெடல் தறி நெசவாளர்கள், புதிய ரக சேலைக்கு கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக பல் வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செப்.25-ஆம் தேதி சிவகாசி கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் புனல்வேலி, முத் துச்சாமிபுரம் பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் சிஐடியு கைத்தறி நெசவாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட் டாட்சியர், இணை ஆணையர், வட் டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நெசவாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கைத்தறித் துறை இயக்குநரிடம் பேசியுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக் கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற தகவல்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தெரிவிக்கப்பட்டதால், நெசவாளர்கள் மகாசபையைக் கூட்டி அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்து பேச்சுவார்த்தையில் இருந்து திரும்பினர்.

இதற்கிடையே, பேச்சுவார்த் தைக்கு வந்த நெசவாளர்களுடன் அதிகாரிகள் எடுத்த புகைப் படத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, நெசவாளர்கள் போராட் டத்தை வாபஸ் பெற்று மறுநாள் முதல் பணிக்குத் திரும்புவதாகப்பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்றதாகப் பதிவிட்டதுடன், நெசவாளர்கள் தனக்கு நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பதிவுக்கு நெசவாளர் கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் பங் கேற்ற நெசவாளர்களுடன் உரியபேச்சுவார்த்தை நடத்தாமல், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து பெடல் தறி நெசவாளர்களின் மகாசபைக் கூட் டம் புனல்வேலியில் நடைபெற்றது. இதில் முத்துச்சாமிபுரம், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூலி உயர்வு, கைஇருப்பு சேலைகளை அரசு கொள்முதல் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை அரசாணை எதுவும் வெளியிடப்படாததால், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 16-வது நாளாக கஞ்சித் தொட்டி போராட்டம் நடைபெற்றது.மேலும், அனைத்து பகுதிகளிலும் நூல் பெறாமல் போராட் டத்தைத் தொடரவும், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சித் தொட்டி திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெசவாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கஞ்சித் தொட்டி போராட்டத் தில் சிஐடியு கைத்தறி நெசவாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.