நெசவாளர்கள் தறியில் அமர்ந்து உற்பத்தி செய்தால்தான் இலவச வேட்டி, சேலைகளை வழங்க முடியும் பெடல் தறி நெசவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்பு கே.பாலபாரதி பேட்டி
30 Sept 2026, 9:12 pm

நெசவாளர்கள் தறியில் அமர்ந்து உற்பத்தி செய்தால்தான் இலவச வேட்டி, சேலைகளை வழங்க முடியும்

பெடல் தறி நெசவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்பு கே.பாலபாரதி பேட்டி

இராஜபாளையம், செப்.30-இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் பெடல் தறி நெசவாளர்கள் புதிய ரக வேட்டி, சேலைக்கு கூலி உயர்வு, வேலையில்லா காலத்துக்கு நிவாரணம், உபரி சேலைகளை அரசுகொள்முதல் செய் வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புனல்வேலி கிராமத்தில் சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் கடந்த 20 நாட்களாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி புதன்கிழமை புனல் வேலிக்கு சென்று பெடல் தறி நெசவாளர் களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிக்கு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை விளக்கினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், நெசவாளர் களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி கனகராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலபாரதி கூறியதாவது:விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நெசவாளர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. புதிய ரக வேட்டி, சேலை உற்பத்தியில் ஏற்கெனவே இருந்த முறையைவிட உற்பத்தித் திறன் குறைந் துள்ள நிலையில், தற்போது வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லைஎன நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு புதிய ரக சேலைகள் இரண்டு மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதற்கான கூலி ரூ.114என அரசு நிர்ணயித்துள்ள நிலையில், பல்வேறு செலவுகள் போக குறைந்ததொகையே கைக்கு கிடைப்பதாகவும் நெசவாளர்கள் கூறுகின்றனர். எனவே, ஒரு சேலைக்கு ரூ.250 கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள் ளனர்.இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கால அவகாசம் கோருவதாக நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியம். நெசவாளர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நெசவாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான உற் பத்தி பாதிக்கப்படும். நெசவாளர்கள் தறியில் அமர்ந்து உற்பத்தி செய்தால்தான் இலவச வேட்டி, சேலைகளை வழங்க முடியும்.காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம்எனவே, முதல்வரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் நெசவாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பர் 5-ஆம்தேதி முதல் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்த உள் ளோம். இரவு, பகலாக நடைபெறும்இப் போராட்டத்தில் அரசியல் கட்சி, சாதி, மத வேறுபாடின்றி மக்கள் பங்கேற்பார்கள்.அதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், நெசவாளர் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், நெசவாளர்களை நேரடியாகச் சந் தித்துப் பேசும்போது போராட்டம் முடிவடையவில்லை என்பதும், அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்பதும் தெரிகிறது.

எனவே, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நெசவாளர் களின் குடியிருப்புகளுக்குச் சென்று அவர் களை நேரடியாகச் சந்தித்துநிலைமையை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என் றார்.