முந்தய பக்கம்

நெசவு தொழிலாளி வீட்டில் கொள்ளை

28 May 2026, 11:23 pm
நெசவு தொழிலாளி வீட்டில் கொள்ளை
<p><strong>நெசவு தொழிலாளி வீட்டில் கொள்ளை</strong> </p><p> திருவள்ளூர், மே 28- திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டையைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி விஜயகுமார், புதனன்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். மதியம் அவர் திரும்பியபோது, மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், பெரியபாளையம் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram