அறிவைப் பெருக்குவதற்கு உரிய ஆயுதங்கள்!
30 Dec 2025, 5:57 pm
<p><strong>அறிவைப் பெருக்குவதற்கு உரிய ஆயுதங்கள்!</strong></p>
<p>உடுமலை, டிச.30- அறிவைப் பெருக்குவதற்குரிய ஆயு தங்களாக தகவல் தொடர்புச் சாதனங்கள் திகழ்கின்றன, இதனை பொழுது போக்கிற் காக பயன்படுத்தக்கூடாது என திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் உரை யாற்றினார். உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல் லூரியில் 50 ஆவது பட்டமேற்பு விழா திங்க ளன்று நடைபெற்றது. இதல் திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் சிறப்பு விருந்தின ராக பங்கேற்றுப் பட்டமேற்பு விழாப் பேருரை நிகழ்த்தினார். முனைவர் வ.கிருஷ்ணன் பேசுகையில், அகில இந்திய அளவில் முதல் நூறு இடங்க ளில் இடம் பெறும் வகையில் தமிழக அரசு கலைக்கல்லூரிகளின் தரம் உயர்ந்துள் ளது. அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளன. முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும் என எண்ணாமல், நம்முடைய குறிக்கோள் நிறைவேறும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களோடு வாழ வேண்டும். விரும்பியதெல்லாம் முளைக் காது. விதைத்தவைகள் மட்டுமே முளைக் கும். நல்ல எண்ணங்கள் தான் செயலுக்கு தூண்டுகோலாக அமைகின்றன. வரலாற் றினை படிப்பவராக இல்லாமல் வரலாற்றை படைப்பவராக மாறவேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்களை மிகுந்த கவ னத்துடன் கையாள வேண்டும். அறிவைப் பெருக்குவதற்குரிய ஆயுதங்களாகத் தகவல் தொடர்புச் சாதனங்கள் விளங்கு கின்றன. வெறும் பொழுது போக்கு சாத னங்களாக மட்டுமே அவற்றை கருதக் கூடாது. ஒவ்வொரு நாளும் புத்தாக்கச் சிந்தனைகளோடு நம்முடைய அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வயதான கழுகு தன்னுடைய சிறகுகளை உதிர்த்து விட்டு மீண்டும் புதிய சிறகுகளோடு ராஜா ளிப் பறவையாக மாறுவதைப் போல இளை ஞர்கள் புதிய சிந்தனைகளோடு புத்தெழுச்சி யுடன் வலம் வர வேண்டும், என்றார். இதில் இளநிலைப் பாடப்பிரிவில் 572 மாணவ மாணவியருக்கும், முதுநிலைப் பாடப்பிரிவில் 186 மாணவ மாணவிகளுக் கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக் கழக அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தரநிலை பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இள நிலை புள்ளியியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கே. பாண்டீஸ்வரி, இள நிலை தாவரவியல் துறையில் மூன்றா மிடம் பெற்ற ஆர். லிடியா, இளநிலை மின் வணிகத் துறையில் மூன்றாமிடம் பெற்ற ஆர். உதயமலர், முதுநிலை வேதியியல் பாடத் தில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்ற ப.கிஷோர், முதுநிலை புள்ளியியல் பாடத் தில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்ற எஸ்.சந்தியா, முதுநிலை சுற்றுலா மேலாண் மைப் பாடத்தில் இரண்டாமிடம் பெற்ற எம். பத்மநாதன் ஆகியோருக்கும் பாராட்டுச் சான் றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.</p>
