200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்!
10 Jan 2026, 2:48 pm
<p><strong>200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! கொளத்தூர் விழாவில் முதலமைச்சர் பேச்சு</strong></p>
<p>சென்னை, ஜன. 10 - சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தனது தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற பின் னர், நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற் றப்பட்டு உள்ளதாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெறு வோம் என்று தெரிவித்தார். தேர்தல் பணிகளில் 50 சதவிகி தம் முடிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 50 சதவிகிதம் நிலுவை யில் உள்ளதாக கூறிய முதல மைச்சர், கட்சியினர் ஆற்றும் பணி களைப் பார்க்கும்போது 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்றும், வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தலில் சிறப் பான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் நம் பிக்கை தெரிவித்தார்.</p>
<p> </p>
