தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

234 தொகுதியிலும் வெல்வோம்! சைதை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேச்சு

5 Apr 2026, 6:26 pm
234 தொகுதியிலும் வெல்வோம்! சைதை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேச்சு
<p><strong>234 தொகுதியிலும் வெல்வோம்! சைதை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேச்சு</strong></p> <p>சென்னை, ஏப்.5 - 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும் என்று சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் கூறினார். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் கூட்டம் சனிக்கிழமை யன்று (ஏப்.4) சைதையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு உடனான தனது உறவை நினைவு கூர்ந்தார். சைதாப்பேட்டை தொகுதி யில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டார். மேலும் அவர் கூறுகையில், `வெல்வோம் 200 படைப்போம் வரலாறு&rsquo; தமிழ்நாடு எங்கும் ஒலிக்கும் வைர வரிகள். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சட்டமன்ற தொகுதி வாரியாக 221 இடங்களில் கூட்டணி மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் கிடைத்தது. 2 இடங்களில் அதிக வாக்கு பெற்ற தேமுதிக-வும் இந்த அணிக்கு வந்துவிட்டது. எனவே கூட்டணி வசம் 223 தொகுதிகள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தாயு மானவர் திட்டம், அன்புசோலை திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம், பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 மாத மகளிர் உரிமைத் தொகை, கோடைக்கால நிவாரணம் 2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ரூ.8ஆயிரம் குடும்ப தலைவி கூப்பன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் போன்ற திட்டங்களை கூறி வாக்கு கேட்டால், நமது அணியை தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். இதன்படி, முதலமைச்சர் சொன்னதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் நமது கூட்டணியே வெல்லும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கு சிபிஎம் சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், செயற்குழு உறுப்பினர் ம.சித்ர கலா, பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.மணி கண்டன், ஒய்.இஸ்மாயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.முருகானந்தம், டி.பண்டராம் பிள்ளை, எம்.ஹெலன் தேவ கிருபை, எஸ்.ஆனந்தகுமார், 140வது வட்டச் செயலாளர் பி.வேலுமணி, திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.ஸ்ரீதரன், பகுதிச் செயலாளர்கள் எம்.கிருஷ்ண மூர்த்தி, அ.துரைராஜ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.