கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!</strong></p>
<p>செந்தில் பாலாஜி நம்பிக்கை கோவை, ஏப்.4- கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக அணியே வெற்றிபெறும் என கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் செந் தில்பாலாஜி தெரிவித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெள்ளியன்று கோட்டைமேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவருக்கு ரோஜா மலர்களை வழங்கினர். நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாக் களையும் அவர் பறக்கவிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளி லும் திமுக கூட்டணி வெற்றி பெறும். முதல மைச்சர் இரண்டாவது முறையாக பொறுப் பேற்பதே தங்கள் இலக்கு. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு அதிக திட்டங் களை முதல்வர் வழங்கியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் கோவைக்கும், தெற்குத் தொகுதிக்கும் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையாக ஒரு சில நாட்களில் வெளியிடப்படும், என்றார்.</p>
