“டப்பா என்ஜின்” அடிமைகளை வேரோடு வீழ்த்துவோம்!
9 Apr 2026, 5:30 am

“டப்பா என்ஜின்” அடிமைகளை வேரோடு வீழ்த்துவோம்!

சீர்காழி, கடலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் சூறாவளி! தமிழகநாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆளுமை பா.ஜ.க-வையும், தில்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமை அ.தி.மு.க-வையும் வேரோடு வீழ்த்த வேண்டும் என்றும், “டப்பா என்ஜின்” அரசியலுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கியுள்ளார். கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்தார்.

பெண்களின் முன்னேற்றத்தை முடக்கும் பிரதமர் மோடி. இக்கூட்டங்களில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் (விடியல் பயணம்) குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தைச் சாடினார். “விடியல் பயணத்தால் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவதாகப் பிரதமர் கூறுகிறார். மெட்ரோ லாபத்தைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு, சாதாரண ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் பிரதமருக்குப் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இது ஒரு மக்கள் நல அரசு; கார்ப்பரேட் கம்பெனி அல்ல என்பதை அவர் உணர வேண்டும்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

காப்பி - பேஸ்ட் பழனிசாமியின் போலி வாக்குறுதிகள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர், “மகளிர் உரிமைத் தொகையை ‘பிச்சை’ என்று கொச்சைப்படுத்திப் பேசிய பழனிசாமி, இப்போது அதே தொகையை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார். எங்களது தேர்தல் அறிக்கையைப் பார்த்து அப்படியே காப்பி - பேஸ்ட் செய்யும் பழனிசாமி, எந்த முகத்தோடு மக்களிடம் வாக்குக் கேட்க வருகிறார்? பழனிசாமி என்ற அகங்காரத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார். மேலும், “துரோகத்தினால் உருவான ஒருவரால் அது பழனிசாமி தான்” என்று மீண்டும் ஒருமுறை விமர்சித்தார்.

தேவேந்திர பட்னவிஸின் பிளாக்மெயில் அரசியலுக்குப் பதிலடி. மதுரையில் பாஜக எம்.எஸ். வெற்றி பெற்றால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பேசியதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். “மதுரை மக்களுக்கு மெட்ரோ வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டுகிறார் பட்னவிஸ். இப்படிப் பகிரங்கமாக பிளாக்மெயில் செய்ய அவருக்கு வெட்கமாக இல்லையா? இதுவா ஜனநாயகம்? தமிழக மக்கள் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவு சாட்சியாக இருக்கும்” என்று முழங்கினார்.

சொத்து: சாதனைகளையே முறியடிக்கும் ஆட்சி. “2021-இல் ஆறாவது முறையாக திமுக அரசு அமைந்தபோது செய்த சாதனைகளை, அமைப்பவருக்குத் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாங்களே முறியடிப்போம். இது உங்கள் ஸ்டாலின் கொடுக்கும் நோண்டி,” என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர், மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை விவரித்தார். “தமிழ்நாடு அணியா? தில்லி அணியா? என்ற இந்தப் போரில், மாநில சுயாட்சியைக் காக்கத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பீர்! மூன்று மாவட்டங்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திட்டக்குடியில் சி.வெ. கணேசன், நெய்வேலியில் சபா. ராஜேந்திரன், புவனகிரியில் துரை. கி. சரவணன், சிதம்பரம் தொகுதியில் தமிழன் அன்சாரி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும்; கடலூரில் ஏ.எஸ். சந்திரசேகருக்கு கை சின்னத்திலும்; பண்ருட்டியில் அபுதாகிர் ரஹ்மான், காட்டுமன்னார்கோவிலில் ஜோதிமணி ஆகியோருக்கு பானை சின்னத்திலும்; விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்துக்கு முரசு சின்னத்திலும் வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார்.

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டம்: பூம்புகாரில் நிவேதா முருகன், வேதாரண்யத்தில் எஸ்.கே. வேதரத்தினம், நாகப்பட்டினத்தில் முகம்மது ஷா நவாஸ், சீர்காழியில் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும்; மயிலாடுதுறையில் ஜமால் முகமது யுனுஸ்க்கு கை சின்னத்திலும்; கீழ்வேளூரில் சிபிஎம் வேட்பாளர் நாகை நாகராஜனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையை நிறைவு செய்தார்.