தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடிப்போம்! பரமத்திவேலூர் திமுக வேட்பாளர் மூர்த்தி பேச்சு

3 Apr 2026, 6:05 pm
எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடிப்போம்! பரமத்திவேலூர் திமுக வேட்பாளர் மூர்த்தி பேச்சு
<p><strong>எதிர்க்கட்சிகளின் சதிகளை முறியடிப்போம்! பரமத்திவேலூர் திமுக வேட்பாளர் மூர்த்தி பேச்சு</strong></p> <p>நாமக்கல், ஏப்.3- எதிர்க்கட்சிகள் என்ன செய் தாலும் அதை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டுமென &nbsp;பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.மூர்த்தி செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நாமக் கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி போட்டியிட அறிவிக்கப்பட் டுள்ளார். இந்நிலையில், வியாழயன்று பர மத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர் ஆலோ சனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் கே. எஸ்.மூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்டத் தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் &nbsp;கூட்டணி கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கடுமை யாக உழைக்க வேண்டும். மக்களிடம் சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி பெற நான் தயாராகி விட்டேன். அதேபோல் என்னுடன் சேர்ந்து வெற்றி பெற நீங்களும் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்க் கட்சிகள் என்ன செய்தாலும் அதை முறிய டிக்க நாம் தயாராக இருக்க வேண்டுமென் றார். &nbsp;இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.தங்கமணி, பரமத்தி வேலூர் பேரூர் திமுக கழக செயலாளர் முருகன், நாமக்கல் மேற்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர் மற்றும் மாவட்டம், ஒன்றியம், நகரம் பேரூர், கிளை, மகளிர் அணி, இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.