முந்தய பக்கம்

அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்

12 Mar 2026, 4:20 pm
அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
<p><strong>அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்</strong></p> <p>சென்னை, மார்ச் 12 - &nbsp;அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம், மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்து வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் &lsquo;எக்ஸ்&rsquo; தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கணினித் துறையில் தமிழ்நாடு உயர்வடைய முன்னாள் முதல்வர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள் ளார். &nbsp;கடந்த 2016 முதல் 2021 வரை &nbsp;அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத் தில் ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டப்பட்ட தாகவும் அவர் கூறினார். அந்த பட்டாபிராம் டைடல் பூங்கா வை, தற்போதைய திமுக ஆட்சி யில் பணிகளை விரைந்து முடித்து திறந்ததோடு, விழுப்புரம், தஞ்சா வூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், &nbsp;வேலூர் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட 7 இடங்களில் சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். மேலும், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் சுமார் &nbsp;12,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் டைடல் பூங்கா க்களுக்கும், திருவண்ணாமலை, ராசிபுரம், நாகர்கோவில், திரு நெல்வேலி, விருதுநகர், ஈரோடு, &nbsp;கரூர், புதுக்கோட்டை, நாகப் பட்டினம் ஆகிய 9 இடங்களில் சுமார் &nbsp;5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பூங்காக் களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறினார். வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து மாவட்டங்களையும், அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவதே அரசின் நோக்கம் என அவர் பதிவில் குறிப்பிட்டுள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram