நடிகர் விஜய்யின் த.வெ.க.வை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டோம்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டம்
29 Mar 2026, 3:34 pm
<p><strong>நடிகர் விஜய்யின் த.வெ.க‌.வை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டோம்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டம்</strong></p>
<p>விருதுநகர், மார்ச் 29- நடிகர் விஜய்யின் த.வெ.க‌.வை கணக்கி லேயே எடுத்துக் கொள்ள மாட்டோம். திமுக கூட்ட ணிக்கும், அதிமுக கூட்ட ணிக்கும் தான் போட்டி என விருதுநகரில் செய்தியா ளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காட்டமாக கூறி னார். விருதுநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணே சன் பிரச்சாரத்தை துவக்கி னார். அவரை ஆதரித்து விருதுநகரில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய சில அம்சங் கள் வருமாறு: “நாங்கள் புலி வேட்டைக்கு புறப்பட்டோம் தற்போது புள்ளிமான் மாட்டியுள்ளது. அதிமுகவை வைத்து தான் தேமுதிக வளர்ச்சியைக் காட்ட முடிந் தது. அதிமுகவை தவிர்த் தால் அவர்கள் பூஜ்ஜியம் தான். தேர்தல் முடிவு அவர்களுக்கு அதை உணர்த்தும். மறைந்த தலை வர் கேப்டன் விஜயகாந்த கொள்கைக்கும் எண்ணத் துக்கும் மாறானது” என்று விஜயபிரபாகரன் போட்டி யிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். த.வெ.க. வேட்பா ளர் பட்டியல் வெளியாகி யுள்ளது குறித்த கேள்விக்கு, “அதை நாங்கள் கணக்கி லேயே எடுத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் பட்டியலைத் தான் பார்த்தோம். ஏனென்றால் போட்டி அதிமுக கூட்ட ணிக்கும், திமுக கூட்டணிக் கும்தான்” என்றார். பெண்களெல்லாம் எங்க பக்கம் தான் இருக்காங்க என விஜய் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இரண்டு பிள்ளைகளை விட்டு விட்டு, மனைவியை விட்டு விட்டு பெண்கள் எங் கள் பக்கம் என சொன்னால் யார் நம்புவார்கள்? தாயை மதிக்கணும்; தகப்பனை மதிக்கணும்; மனைவியை மதிக்கணும்; பிள்ளைகளை மதிக்கணும். அதுக்கப்புறம் தமிழ்நாட்டை மதிக்கணும். உங்க தாயும் உங்களோட இல்ல. உங்க தகப்பனும் உங்களோட இல்ல. அவங்க சொல்றத கேட்க முடியாது. ஒப்புக்கு போஸ் குடுக்கு றீங்க. அதெல்லாம் எங்க ளுக்கு கண்கூடாக தெரி கிறது. நாடக மேடையை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விஜயை மக் கள் நடிகராகத்தான் பார்ப் பார்கள்” என்றார்.</p>
