தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்!

21 Nov 2025, 2:51 pm
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்!

ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்!

சென்னை, நவ. 21 - முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதி கார மையங்கள் இருக்க முடி யாது. அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்கு உட்பட்டே அரசி யலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசி யலமைப்பை மீறிச் செயல்படலாகாது! சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளு நருக்கு இல்லை - என உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப் படுத்தியுள்ளது. எனவே, கால வரையின்றிக் காலம் தாழ்த்த லாம், சட்டமுன் வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்பு தல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநரின் கூற்றை உச்சநீதி மன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது. அந்த வகையில், மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்! சட்ட முன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!" என்று முதலமைச்சர் கூறியுள்ளார். "குடியரசுத் தலைவரின் கேள்வி களுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது" என்பதை விளக்கியுள்ள முதலமைச்சர், "புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரி விக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை" என 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ள தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.