தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குரிமைப் பறிப்பை அனுமதிக்கமாட்டோம்! தன்னிச்சையான எஸ்ஐஆர் அமலாக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் ஆவேசம்

11 Nov 2025, 3:41 pm
வாக்குரிமைப் பறிப்பை அனுமதிக்கமாட்டோம்! தன்னிச்சையான எஸ்ஐஆர் அமலாக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் ஆவேசம்

வாக்குரிமைப் பறிப்பை அனுமதிக்கமாட்டோம்! தன்னிச்சையான எஸ்ஐஆர் அமலாக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் ஆவேசம்

சென்னை, நவ. 11 - வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) மூலம் மக்க ளின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை யைப் பறிப்பதை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில், சிறுபான்மை யினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடி யினர் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கு நடக்கும் முயற்சியைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ, ம.தி.மு.க., வி.சி.க., ம.ம.க., ம.நீ.ம., த.வா.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி களின் சார்பில், தமிழகம் முழுவதும் செவ்வாயன்று (நவம்பர் 11) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக, வட சென்னை யில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தில்லியில் திங்கட்கிழமை கார் வெடித்த விபத்தில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந் துள்ளனர். பாஜக ஆட்சியில் எப்போ தெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச் சாரம் அரங்கேறுகிறது. உச்சபட்ச பாது காப்புள்ள தலைநகர் தில்லியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள் ளது என்றால், அதற்குப் பொறுப் பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டாமா?  உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவிக்கிறது. காயமடைந்த வர்களும் விரைவில் குணமடைய விரும்புகிறது. அத்துடன், உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எஸ்ஐஆர் மூலம்  குடியுரிமைக்கு ஆபத்து பாஜக அரசும், தேர்தல் ஆணைய மும் கொண்டு வந்த எஸ்ஐஆர் திட்டத்தை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர்கள் கேட்கும் ஆவணங்கள் எல்லாம் சாதாரண மக்களிடம் இருக் காது. அதனால்தான், இது வெறும் வாக்குரிமைப் பதிவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இந்திய நாட்டு மக்களின், தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களின் குடியுரிமையையும் சேர்த்துப் பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறோம். மிகக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறோம். நவம்பர் 4-ஆம் தேதியிலிருந்து கடந்த ஒரு வார காலமாக இந்தத் திருத்தப் பணி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணை யம் சொன்ன அடிப்படையில் அந்தப்  படிவம் விநியோகம் செய்யப்பட்டி ருக்கிறதா, அதில் சொல்லப்பட்ட ஆவணங்களைக் கேட்கும் முறையில் அது நடைபெற்றிருக்கிறதா என்பதை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். மதுரையில் எங்கள் தலைவர் ஒரு வரின் வீட்டுக்கு, எஸ்ஐஆர் படிவத்தை அதிமுக கவுன்சிலர் கொண்டுவந்து கொடுத்துள்ளார். இந்தப் படிவத்தை  விநியோகம் செய்ய அதிமுக கவுன்சில ருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? பி.எல்.ஓ. (பூத் லெவல் அதிகாரி - BLO) தான் ஒவ்வொரு வீடாகச் சென்று,  சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் அல்லது வாக்காளராகப் பதிவு செய்ய விரும்பும் நபரிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு படிவத்தைக் கொடுப்பார்

என்று தமிழகத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக கவுன்சிலர் வீடு வீடாகச் சென்று அறி விப்பைக் கொடுப்பதைப் போல இந்தப் படிவத்தைக் கொடுத்திருக்கிறார். ஜனநாயகப் பூர்வமாகத் தேர்தலை நடத்துவோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? இதுவரை நடந்திருக் கிற பல தேர்தல்களில் பல மோசடி கள் நடைபெற்றுள்ளன என்பதை அம்ப லப்படுத்தியதற்குப் பிறகும், அதன் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாஜகவுக்கு உடந்தையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. இப்படிப்பட்ட கைப்பாவை ஆணையம், தேர்தல் நடத்தினால், அது  எப்படி நியாயமான தேர்தலாகவும், ஜனநாயகப் பூர்வமான தேர்தலாகவும் இருக்க முடியும்?. நீதிமன்றப் போராட்டமும் அதிமுகவின் நிலைப்பாடும் தேர்தல் ஆணையம் மற்றும்  தேர்தல் ஆணையர்கள் அரசிய லமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் என்ன அதிகாரத்தை வழங்கி இருக்கிறதோ, அதன் அடிப்படையில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியின் கைத்தடியாக அவர்கள் நடந்துகொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக ஒருபுறம் மக்க ளைத் திரட்டித் தெருவிலே போராடு கிறோம். அதே நேரத்தில், சட்டப் போராட்டத்தையும் மேற்கொள்வது என்று கடந்த நவம்பர் 2 அன்று தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையில், சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், உச்சநீதி மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ கம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன.  பாஜக கூட நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. ஆனால், நாட்டிலேயே அதிமுக மட்டும்தான் எஸ்ஐஆர்-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. “வாக்குகள் பறிபோகாது” என இதை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமியால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? அர சியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும். வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது, தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணை யத்தின் வேலை. குடிமகனா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது உள்துறை அமைச்சகத்தின் வேலை, தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. ஆறரை கோடி வாக்காளர்களின் வாக்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் வாக்குரிமை யை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதற்கான அனைத்துப் போராட்டங் களையும் முன்னெடுப்போம்.  இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித் தார். பங்கேற்றோர் இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் உரையாற்றினர். அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர், ஜோசப் சாமுவேல், ஜெ.ஜெ. எபிநேசர், பரந்தாமன், வெற்றி அழகன், மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, மேயர் ஆர்.பிரியா, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயி ரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஜி. ராமகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் சட்டமன்ற உறுப்பி னர் க. சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, மக்களவை உறுப்பினர் கே. செல்வம், சட்டமன்ற உறுப்பி னர் எழிலரசன், சிபிஎம் மாவட்டச்செய லாளர் நேரு, சிபிஐ மாவட்டச் செயலா ளர் பி. சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உ. வாசுகி  எஸ்.ஐ.ஆருக்கு எதிராக, சென்னை மேற்கு, தென்மேற்கு மாவட்டம் சார்பில் சுவாமி சிவானந்தசாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக  பொருளாளர் டி.ஆர். பாலு, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோ வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் உ. வாசுகி, சிபிஐ மூத்த தலைவர் இரா. முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தற்போதைய வடிவில்  நடைமுறைப்படுத்தப்பட்டால், மிகப்பெரிய அளவிலும் நியாயமற்ற முறையிலும் உண்மையான வாக்கா ளர்களது வாக்குரிமை பறிக்கப்படும் கடுமையான ஆபத்து உள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை மக்கள், புலம் பெயர்ந்து வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாத ஏழை மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படு வார்கள். எனவே தான், தேர்தல் ஆணை யத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும், எஸ்ஐஆர் அம லாக்கத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல் என மாநிலம் முழுவதும் செவ்வாயன்று (நவ.11) ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

எஸ்ஐஆரை போராடி வெல்வோம்!  கே. பாலகிருஷ்ணன் பேச்சு

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது: எஸ்.ஐ.ஆர். நடைமுறையால் மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் பேராபத்து உள்ளது. எனவே தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆருக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வழக்கு தொடுத்துள்ளார். இதன்மூலம், பாஜகவிற்கு அனைத்து வகையிலும் சேவகம் புரிபவராக அவர் மாறிவிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி போன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவைப் பெற்று, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பைப் பெறவே அவர்  இவ்வாறு செயல்படுகிறார். அதிமுகவினரின் வாக்கு பறிபோகும்போதுதான் எஸ்.ஐ.ஆரின் ஆபத்து அதிமுகவினருக்கு தெரியவரும். ஆனால், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுதியாகப் போராடி வெல்லும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மக்களவை உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.