தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Mar 2026, 2:57 pm

உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்

சென்னை: பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக பணியாற்றி வந்த பாலநாகதேவியை உளவுத்துறை டிஜிபி யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமாருக்கு பொரு ளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாகவும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனாவுக்கு அதே துறையின் ஏ.டி.ஜி.பி.யாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கோரும் பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர்கள்!

சென்னை: தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் நிலையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளனர். கேன்களில் எரி பொருள் வழங்க மறுக்கும் சூழலில் நிலைய ஊழியர்கள் மிரட்டல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகங்களை எதிர் கொள்வதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல இடங்களிலும் நிலைமை சட்டம் - ஒழுங்கு நெருக்கடியாக மாறி வருவதாகவும், இதை ஊழியர்கள் மட்டுமே தனியாக நிர்வகிக்க இயலாது என்றும் உரிமையாளர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்

சென்னை: இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக தமிழ கத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றார்

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிப்பு

சென்னை, மார்ச் 14- தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவ னங்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக அதி கரித்துள்ளது. பெரு நிறு வனங்கள் மட்டுமின்றி ஸ்டார்ட் அப் நிறுவ னங்களுக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளிக் கிறது. ஸ்டார்ட் அப் நிறு வனங்களை தொடங் குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா தெரி வித்தார்.

இடதுசாரிகளுக்கு உரிய இடங்களைப் பெறுவோம்! சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி

சென்னை, மார்ச் 14 - மாமேதை காரல் மார்க்சின் 143- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கன்னிமாரா நூலக வளா கத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டி யன் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களி டம் பேசிய மு. வீரபாண்டியன், “திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அதே நிலையில் தான் உள்ளது. கடந்த முறையை விட ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ள கூறினார்கள். 6 தொகுதிகளை விட கூடுதலாக வழங்க மீண்டும் மீண்டும் வலியு றுத்தி வருகிறோம். மார்ச் 15 அன்று நடைபெறும் கட்சியின் மாநி லக் நிர்வாகக்குழு எடுக்கும் முடிவு தான் இறுதியானது. விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம். பாஜகவை வீழ்த்துவதுதான் ஒரே நோக்கம். இடதுசாரிகள் எங்களுக்குரிய இடத்தை பெறுவோம்” நாடாளுமன்றம், சட்டமன்றத் தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு நல்லது என்று பொரு ளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறினார். அதை அனைவரும் உணர்வார்கள். கூட்டணியில் ஜனநாயக பூர்வமான உரை யாடலுக்கு திமுக இடமளிக்கிறது” என்றார்.