தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘பாசிச பாஜக - அடிமை அதிமுக அணியை டெபாசிட் இழக்க செய்வோம்’: முதல்வர்

21 Feb 2026, 4:39 pm
‘பாசிச பாஜக - அடிமை அதிமுக அணியை டெபாசிட் இழக்க செய்வோம்’: முதல்வர்
<p><strong>&lsquo;பாசிச பாஜக - அடிமை அதிமுக அணியை டெபாசிட் இழக்க செய்வோம்&rsquo;: முதல்வர்</strong></p> <p>மதுரை, பிப்.21- தமிழக சட்டப் பேரவைக்கு ஏப் &nbsp;ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக் &nbsp;கும் நிலையில், மதுரை உத்தங்குடி யில் &lsquo;என் வாக்குச்சாவடி வெற்றி &nbsp;வாக்குச் சாவடி&rsquo; என்ற தலைப்பில் &nbsp;தென்மண்டல திமுக வாக்குச் சாவடி &nbsp;முகவர்கள் மாநாடு, சனிக்கிழமை (பிப். 21) நடைபெற்றது. &nbsp;இதில் திமுக தலைவரும் முதல மைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, &ldquo;வாக்காளர் சிறப்பு தீவிர &nbsp;திருத்தப் பணிகள் மூலம் பல மாநி லங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட னர். ஆனால், அது தமிழகத்தில் மட்டும் தடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி &nbsp;நிச்சயம்; அதற்கும் மேல் வெல்வது நமது இலக்கு&rdquo; என்று அவர் தெரி வித்தார். &ldquo;கூட்டணி, தொகுதி பங்கீடு என &nbsp;அனைத்திலும் திமுகவே முதலி டத்தில் இருக்கும் என்றும், தேர்தல் &nbsp;பணியில் ஒவ்வொரு வாக்காளரை யும் குறைந்தது 5 முறையாவது சந்தித்து வாக்குகளை திரட்ட வேண்டும்&rdquo; என்றும் முகவர்களிடம் வலியுறுத்தினார். &nbsp;&ldquo;அடுத்த 2 மாதம் உங்களுக்கு ஓய்வே கிடையாது. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்&rdquo; &nbsp;என்று அவர் கூறினார். &ldquo;பிரதமர் மோடியிடம் எடப்பாடி &nbsp;பழனிசாமியால் எந்தக் கோரிக்கை யும் வைக்க முடியவில்லை&rdquo; என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், &ldquo;ஒன்றிய அரசை எதிர்த்தால் வழக்கு போடு வார்களா, போடுங்கள். நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா?&rdquo; என்று &nbsp;சவால் விடுத்தார். &ldquo;தமிழ்நாடு அணியா, தில்லி அணியா என்ற கேள்வியை மக்களி டம் எழுப்புங்கள். தமிழ்நாடு அணி &nbsp;ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக &nbsp;ஜெயிக்கணும். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும். பாசிச &nbsp;பாஜக, அடிமை அதிமுகவை விரட்டி வெல்வோம் ஒன்றாக!&rdquo; என்றும் முதலமைச்சர் தெரிவித் தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.