ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை நிச்சயம் முறியடிப்போம்! - நிக்கோலஸ் மதுரோ
5 Jan 2026, 6:21 pm

வரலாற்றுப் பதிவு: ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிய மக்கள் தலைவர் மதுரோ, கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் (2026 ஜனவரி 1) அளித்த நேர்காணல்

2026-ஆம் ஆண்டின் தொடக்கம் வெனிசுலா வரலாற்றில் மிகக் கொந்தளிப்பான ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், வெனிசுலாவின் இறையாண்மையை நசுக்க இராணுவ ரீதியிலான அழுத்தங்களை அதிகரித்திருந்த வேளையில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சர்வதேச அரசியல் ஆய்வாளர் இக்னாசியோ ராமோனெட்டிற்கு இந்த நேர்காணலை அளித்தார். தற்போது மதுரோ கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், “போர் வேண்டாம், அமைதி வேண்டும்” என்று அவர் இந்த நேர்காணலில் முன்வைத்த முழக்கம் உலகெங்கும் உள்ள இடதுசாரித் தோழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரகஸ் நகரின் வீதிகளில் தாமே வாகனத்தைச் செலுத்தியபடி, மக்களின் ஆரவாரங்களுக்கு இடையே அவர் பகிர்ந்துகொண்ட விரிவான கருத்துக்கள் இதோ:

இக்னாசியோ ராமோனெட்: ஜனாதிபதி அவர்களே, 2025-ஆம் ஆண்டு முடிந்து 2026 பிறந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவிற்கான பொருளாதார ஆணையத்தின் (ECLAC) அறிக்கை, வெனிசுலா 9% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்காவின் இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் இந்த ‘பொருளாதார அதிசயம்’ எப்படிச் சாத்தியமானது? ஜனாதிபதி மதுரோ: தோழர் இக்னாசியோ, இது ஒரு கூட்டு உழைப்பின் வெற்றி. 2020- இல் நாம் வகுத்த ‘14 பொருளாதார இயந்திரங்கள்’ (14 Engines) திட்டம் இப்போது முழு வீச்சில் பலன் தருகிறது. நாம் ஒரு பழைய மாதிரியை உடைத்தெறிந்தோம். முன்னரெல்லாம் நாம் ஒரு பெட்ரோலியக் காலனியாக இருந்தோம். எண் ணெய் விற்று வரும் பணத்தில் எல்லாவற்றை யும் இறக்குமதி செய்தோம். ஆனால் அமெரிக்கா எமது வருமானத்தை முடக்கியபோது, நாம் சுயமாக உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்டோம். இன்று வெனிசுலா மக்கள் உண்ணும் உண வில் 90%-க்கும் மேல் உள்நாட்டு உற்பத்தி தான். 2026-இல் ‘பூஜ்ஜியம் இறக்குமதி’ என்பதே எமது இலக்கு. இது பொருளாதார வெற்றி மட்டுமல்ல, வெனிசுலா மக்களின் உணர்வுப் பூர்வமான பங்கேற்பு மற்றும் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி. l l l இக்னாசியோ ராமோனெட்: பணவீக்கம் இன்னும் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. சர்வதேசச் சந்தையில் வெனிசுலா நாணயத்தின் மதிப்பைக் குறைக்கச் சூழ்ச்சிகள் நடக்கின்றன. இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? ஜனாதிபதி மதுரோ: இது ஒரு ‘சிந்தனைத்திறன் மீதான போர்’ (Cognitive War). மக்களின் மூளைக்குள் பொருளாதார அச்சத்தைப் புகுத்த அவர்கள் முயல்கிறார்கள். ஆனால் நாம் ‘வருமானக் குறியீட்டு முறை’ (Indexing of Incomes) மூலம் தொழிலாளர் களின் வாங்கும் திறனைப் பாதுகாத்து வரு கிறோம். கடந்த டிசம்பரில் மட்டும் உள்நாட்டு வர்த்தகம் 34% உயர்ந்துள்ளது. இது மக்களி டம் பணம் புழங்குவதைக் காட்டுகிறது. ஏகாதி பத்தியத்தின் ஊகத் தாக்குதல்களை முறியடிக்க நாம் புதிய நிதிசார் உத்திகளை 2026-இல் தீவிரப்படுத்துவோம். l l l இக்னாசியோ ராமோனெட்: வெனிசுலா வின் ‘கம்யூன்’ (Commune) அல்லது நேரடி ஜனநாயக முறை பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இது மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தை விட எப்படிச் சிறந்தது? ஜனாதிபதி மதுரோ: மேற்கத்திய ஜனநா யகம் என்பது மக்களே இல்லாத ஜனநாயகம். அது மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பாதுகாக்கிறது. ஆனால் எமது ‘பொலிவாரியன் ஜனநாயகம்’ மக்களிடமே அதிகாரத்தைக் கொடுக்கிறது. நம் நாட்டில் 49,000 கம்யூன் கவுன்சில்களும், 4,100-க்கும் மேற்பட்ட கம்யூன்களும் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் நாம் நான்கு முறை தேசிய அளவில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தினோம். எந்தப் பகுதியில் என்ன திட்டம் வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்கிறார்கள். 33,000 மக்கள் திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம். அமைச்சர்களோ ஜனாதிபதியோ அல்ல, மக்களே தங்களை ஆளு கிறார்கள். ‘மதுரோ ஒரு சர்வாதிகாரி’ எனச் சொல்லும் ஊடகங்கள், காரகஸ் வீதிகளில் மக்கள் எப்படிச் சுதந்திரமாகத் தங்கள் அதிகார த்தைச் செலுத்துகிறார்கள் என்பதை வந்துபார்க்கட்டும். l l l இக்னாசியோ ராமோனெட் : அமெரிக்கா வின் கடற்படை வெனிசுலா எல்லைக்கு அருகே முகாமிட்டுள்ளது. அவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை உங்கள் மீது சுமத்துகிறார்கள். இதன் பின்னணி என்ன? ஜனாதிபதி மதுரோ: “இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இராக் மீது போர் தொடுக்க ‘பேரழிவு ஆயுதங்கள்’ இருப்பதாக எப்படிப் பொய் சொன்னார்களோ, அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். உலகில் 100% கொக்கைன் கொலம்பியாவில்தான் உற்பத்தி யாகிறது. ஆனால், அதைத் தடுப்பது நாங்கள் தான். இதுவரை 431 கடத்தல் விமானங்களை நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம். அமெரிக்காவிற்குத் தேவை எமது எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் மட்டுமே. சர்வதேசச் சட்டங்களை மீறி ஒரு நாடு மற்றொரு நாட்டை அச்சுறுத்துவது மனிதாபிமானமற்ற செயல். அமெரிக்க மக்கள் போரை விரும்பவில்லை, ஆனால் அந்நாட்டு அரசு போரைத் திணிக்கிறது. l l l இக்னாசியோ ராமோனெட்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் நீங்கள் பேசியதாகக் கூறப்படுகிறதே? ஜனாதிபதி மதுரோ: ஆம், நவம்பர் 21-ஆம் தேதி அவர் என்னை அழைத்தார். சுமார் 10 நிமிடங்கள் பேசினோம். உரையாடல் மரியாதை யாகவே இருந்தது. ஆனால், அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவின் நட வடிக்கைகள் மோசமாகின. அவர்கள் முதிர்ச்சி யற்ற முறையில் ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டார்கள். அமெரிக்காவிற்கு நான் சொல்லும் செய்தி: “நாங்கள் உங்களைச் சார்ந்து இல்லை, ஆனால் சமமான உறவை விரும்புகிறோம்’. மிரட்டல்களுக்கு வெனிசுலா பணியாது.” l l l இக்னாசியோ ராமோனெட்: இப்போது நாம் காரகஸ்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதிகளில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த இடம் உங்களுக்கு எத்தகைய உணர்வைத் தருகிறது? ஜனாதிபதி மதுரோ: இக்னாசியோ, இதோ இந்த சான் பெட்ரோ (San Pedro) அடுக்குமாடி குடியிருப்புதான் நான் பிறந்து வளர்ந்த இடம். 50 சதுர மீட்டர் பரப்பளவே கொண்ட மிகச் சிறிய வீடு. நான் ஒரு தொழிலாளியாக, பேருந்து ஓட்டுநராக இங்கிருந்துதான் வந்தேன். 1959-இல் தோழர் பிடல் காஸ்ட்ரோ வெனிசுலா வந்தபோது உரையாற்றிய இதே வீதிகளில்தான் நாம் இப்போது செல்கிறோம். மக்கள் எனக்குப் பின்னால் இருக்கிறார்கள். 95% வெனிசுலா மக்கள் அமெரிக்கத் தலை யீட்டை எதிர்க்கிறார்கள். இந்த மக்கள் சக்தியே எமது பலம். எனக்குப் பதுங்கு குழிகள் தேவை யில்லை, மக்களோடு இருப்பதே எனக்குப் பாதுகாப்பு. l l l இக்னாசியோ ராமோனெட்: 2026-ஆம் ஆண்டு வெனிசுலாவிற்கு எத்தகைய ஆண்டாக இருக்கும்? ஜனாதிபதி மதுரோ : 2026-ஐ நான் ‘அற்புதமான சவால்களின் ஆண்டு’ (Year of Admirable Challenge) என்று அழைக்கிறேன். நாம் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைவோம். ஏகாதிபத்தியத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிப்போம். அமைதியே எமது நோக்கம். எமது முழக்கம் இதுதான்: ‘Not War, Yes Peace’ (போர் வேண்டாம், அமைதி வேண்டும்). எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் சமோரா, பொலிவார், சாவேஸ் ஆகியோரின் வழியில் நாம் தாய்நாட்டை எந்நிலையிலும் காப்போம். நேர்காணலின் நிறைவு: வரலாற்றின் பாடம் நேர்காணலின் இறுதியில், மதுரோ காரகஸ் நகரின் விடுதலை வீரர்களின் நினைவுச்சின்னத் தின் முன் நின்று, “நாங்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்கவில்லை, ஆனால் எமது நிலத்தைத் திருட நினைப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்று உருக்கமாகக் கூறி விடைபெறுகிறார். நன்றி: டெலிசூர் தொலைக்காட்சி தமிழ்ச் சுருக்கம்: எஸ்.பி.ஆர்