தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் உழைப்பைச் சுரண்டும் பாஜகவை வீழ்த்துவோம்

6 Apr 2026, 5:37 pm
மக்களின் உழைப்பைச் சுரண்டும் பாஜகவை வீழ்த்துவோம்
<p><strong>மக்களின் உழைப்பைச் சுரண்டும் பாஜகவை வீழ்த்துவோம்</strong></p> <p>கோவை, ஏப்.6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சூலூர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தளபதி முருகே சனை ஆதரித்து, திமுக துணை &nbsp;பொதுச்செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சூலூர் அண்ணா சீரணி கலையரங்கில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, இந்த தேர்தல் என் பது வெறும் ஆட்சி மாற்றத்திற் கான ஒரு சாதாரணத் தேர்தல் &nbsp;அல்ல. இந்தியாவின் உன்னதமான &nbsp;அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த போர். ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, மாநிலங்க ளின் உரிமைகளைப் பறிப்பதோடு, ஜனநாயக தூண்களை சிதைத்து வருவகிறது. மேலும், ஒன்றிய அரசின் மக்கள் &nbsp;விரோதப் போக்கு குறித்து பேசிய &nbsp;அவர், பாஜக ஆட்சிக்கு வந்தபோது &nbsp;இருந்த சிலிண்டர் விலை இன்று விண்ணைத் தொட்டுள்ளதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண் டும். விலைவாசி உயர்வாலும், ஜிஎஸ்டி வரியாலும் மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. மேலும், &nbsp;இயற்கை பேரிடர் காலங்களில் &nbsp;தமிழகத்தைப் புறக்கணிப்பதை யும், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிப் பங்கீட்டை சரியாக வழங் காமல் வஞ்சிப்பதையும் வழக்க மாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கள் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. நீட் &nbsp;விலக்கிற்காக திமுக தொடர்ந்து சம ரசமின்றிப் போராடும். தமிழகத்தின் உரிமைகளை மீட் டெடுக்கவும், நாட்டின் பன்முகத் தன்மையை காக்கவும் வரும் தேர் தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளரை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சூலூர் தொகுதி மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதேபோன்று கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிர காஷ்-க்கு கை சின்னத்தில் வாக்கு &nbsp;சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.