தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிப்போம்!

30 Dec 2025, 5:57 pm
தமிழக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிப்போம்!
<p><strong>தமிழக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிப்போம்!</strong></p> <p>திருப்பூர், டிச.30- இந்திய மாணவர் சங்கத்தின் 56ஆவது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு திங்க ளன்று திருப்பூர் மாவட்டம், அவி நாசியில் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் சஞ் சீவ் பங்கேற்று சிறப்புரையாற்றி னார். &nbsp;அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரம், ஜனநாயகம், சோசலி சம் என்ற லட்சிய முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தின் வெண் கொடி கடந்த 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 56 ஆம் &nbsp;ஆண்டு அமைப்பு தின விழாவை &nbsp;ஜனவரி 30 இல் கொண்டாடுகிறது. &nbsp;கேரளாவில் அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களி லும் இந்திய மாணவர் சங்கம் வலு வாக உள்ளது. அங்கு நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தலில் எஸ்எப்ஐ மகத்தான வெற்றி பெறு கிறது. அதேபோல் தமிழகத்திலும் கல்வி நிறுவனங்களில் இந்திய &nbsp;மாணவர் சங்கம் வலிமையாக உள் ளது. இங்கு கல்வி நிலையங்களில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும், இங்கு மாணவர் பேர வைத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்திய மாணவர் சங்கம் முதன்மை யான சங்கமாக இருக்கிறது என்பது தெரியும், நிச்சயம் எஸ்எப்ஐ மகத் தான வெற்றி பெறும். கீழ்வெண்மணி, புன்னப்புரா வயலார், கூத்துபரம்பா தியாகிகள், &nbsp;சோமு-செம்பு மாணவத் தியாகி கள் உள்ளிட்ட தியாகிகளின் தியா கத்தை நெஞ்சில் சுமந்து நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் பாசிச ஆர்எஸ்எஸ், பாஜக, அதன் &nbsp;மாணவர் அமைப்பான ஏபிவிபி &nbsp;ஆகியவை நாட்டில் மதவெறியை தூண்டி வருகின்றன. அவர்களின் வெறுப்பு அரசியல், பிரிவினை வாதத்துக்கு எதிராக மாணவர்கள் நலனுக்காக மட்டுமின்றி மக்கள் நலன், நாட்டு நலனுக்காக எஸ்எப்ஐ போராடி வருகிறது. எஸ்எப்ஐ மாண வர்கள் வகுப்பறைக்கு உள்ளே மட்டுமின்றி வீதிகளிலும் அநீதிக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மலையாளம், தமிழ் என்ற நாம் பேசும் மொழி வெவ்வேறாக இருந் தாலும் இந்த வெண் கொடி நம்மை இணைக்கிறது. இந்தியா முழுவ தும் இருக்கும் மாணவர்களை உயர்ந்த லட்சியத்துடன் இணைக் கிறது. கேரளத்திலும், தமிழ்நாட்டி லும் சட்டமன்றத் தேர்தல் வரப் &nbsp;போகிறது. இந்த இரண்டு மாநி லங்களிலும் இருக்கக்கூடிய பின ராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை யும், திமுக அரசையும் தோற்கடிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சிக்கிறது. அதற்காக பல வழி களில் முயற்சி செய்கிறது. இங்கி ருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இவரைப் போலவே கேரளாவில் இருக்கும் ஆளுநர் அர்லேகர் ஆகி யோர் மூலம் மாநில அரசுகளுக்கு எதிராக குழப்பம் விளைவிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக வும் மாணவர்களாகிய நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் வரக்கூடிய சட்ட மன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடி யாதபடி நீங்கள் தோற்கடிக்க வேண் டும். கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அங்கும் பாஜக ஒரு தொகுதியில் கூட &nbsp;வெற்றி பெறக் கூடாது என்று தோற் கடிக்க நாங்கள் முயற்சி செய்து &nbsp;வருகிறோம். எல்லாவற்றையும் விட நாம் மனிதர்கள், மக்கள் நலன் தான் முக்கியம், மக்கள் ஒற்றுமை முக்கி யம். அதற்காக எஸ்எப்ஐ உயர்ந்த லட்சியத்துடன் தொடர்ந்து போரா டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் இந்திய மாண வர் சங்க மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது, கல்வி வியாபாரம யமாக்கலைப் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார். பொதுக் கூட்டத்தின் நிறைவாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.