தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஆந்திராவைப் போல உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’ மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை!

14 Nov 2025, 1:26 pm
‘ஆந்திராவைப் போல உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’ மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை!
<p><strong>&lsquo;ஆந்திராவைப் போல உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்&rsquo; மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை!</strong></p> <p>சென்னை, நவ. 14 - மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க &nbsp;வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் &nbsp;தலைமைச் செயலாளரிடம், அனைத்து &nbsp;வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் நேரில் முறையிட்டு மனு &nbsp;அளித்தனர். தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளி களுக்கு தற்போது வழங்கி வருகிற மாத உதவித்தொகையை ஆந்திரா வில் வழங்குவதைப் போன்று உயர்த்தி &nbsp;வழங்க வலியுறுத்தி &lsquo;தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் &nbsp;மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம்&rsquo; சார்பில், நவம்பர் 11 அன்று &nbsp;மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகங்கள் முன்பும் முற்றுகைப் போராட் டம் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் &nbsp;திறனாளிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் மாற்றுத் &nbsp;திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து &nbsp;கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. &nbsp;இப்பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் தலைமைச் செயலாளர் க. முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் துறை இயக்குநர் ம. லட்சுமி உள்ளிட் டோரும், அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் அதன் &nbsp;மாநிலத் தலைவர் தோ. வில்சன், &nbsp;பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, &nbsp;பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, செயலாளர் எஸ். பகத்சிங், துணைச் செயலாளர் சி. ரமேஷ்பாபு ஆகி யோரும் கலந்து கொண்டனர். உதவித் தொகையை &nbsp;உயர்த்த பரிசீலிக்கப்படும் பேச்சுவார்த்தையின்போது கீழ்க் கண்ட முடிவுகள் உறுதி செய்யப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசிட மிருந்து போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத தால் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க இயலவில்லை என்றும், உயர்த்தி வழங்க முயற்சிப்பதாகவும் தலைமைச் &nbsp;செயலாளர் க. முருகானந்தம் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரி யும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் தற்போது நடைமுறையில் உள்ள 8 &nbsp;மணி நேர வேலைக்கு பதிலாக 4 &nbsp;மணி நேர வேலையை உறுதி செய்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், 18 வய திற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தற்போது நடைமுறை யில் உள்ள மாவட்ட ஆட்சியர் தலை மையிலான வயது தளர்வு கமிட்டியை கலைத்துவிட்டு வயது வரம்பு பாரா மல் மாற்று த்திறனாளிக்கான சான்றி தழ் வைத்திருக்கும் தகுதியான அனை வருக்கும் உதவித்தொகை வழங்கிட வும் உறுதி அளிக்கப்பட்டது. விண்ணப்பித்து காத்திருப்போருக்கு விரைவில் உதவித் தொகை தமிழக அரசின் மாற்றுத் திறனாளி கள் துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக உதவித்தொகை கிடைக்கா மல் காத்திருக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு, மாற்றுத் திறனாளி துறையில் &nbsp;விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்குவதாகவும், வருவாய்த் &nbsp;துறை மூலம் விண்ணப்பித்தோருக் கும் முன்னுரிமை அடிப்படையில் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு &nbsp;செய்வதாகவும் உறுதி செய்யப்பட்டது. ஏஏஒய் குடும்ப &nbsp;அட்டைகள் வழங்கப்படும் தில்லி உயர்நீதிமன்ற வழிகாட்டு தல் மற்றும் ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகள் துறை உத்தரவு ஆகிய வற்றை பரிசீலித்து மாற்றுத் திறனாளி கள் குடும்பத்தினருக்கு அந்தி யோதயா அன்ன யோஜனா (AAY) &nbsp;குடும்ப அட்டைகள் வழங்க உரிய &nbsp;ஏற்பாடு செய்யப்படும், போக்குவரத்து &nbsp;துறை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஊர்திப் படி ரூ. 2500- வழங்குவது உறுதி &nbsp;செய்யப்படும், மாற்றுத் திறனாளி களின் பிரச்சனைகளை பேசித் தீர்வு காண்பதற்கான மாநில வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலான சி.ஆர்.ஏ. கூட்டம் இனி 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் நிர்வாக ஆணை யர் அல்லது மாற்றுத் திறனாளிகள் &nbsp;துறை செயலாளர் தலைமையில் நடத்தப்படும் என்றும் உறுதியளிக்கப் பட்டது. மருத்துவம், போக்குவரத்து அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு மருத்துவம் மற்றும் போக்கு வரத்துத் துறைகளில் மாற்றுத்திற னாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்ச னைகளை பற்றி விவாதிப்பதற்காக இவ்விரு துறை அதிகாரிகள் மற்றும் &nbsp;அனைத்துவகை மாற்றுத் திறனாளி கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள் ளும் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு உட னடியாக ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், அரசாணை எண் 20-இன் &nbsp;படி தமிழக அரசின் பல்வேறு துறை களில் இரண்டு ஆண்டிற்கும் மேலாக &nbsp;பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் &nbsp;அனைவரையும் பணி நிரந்தரம் &nbsp;செய்யவும் இப்பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டது. இத்தகவலை, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், &nbsp;பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி &nbsp;ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.