தேனீக்களைப் போல் ஆர்வமுடன் வாக்குச்சாவடி சென்று வாக்கு செலுத்த வேண்டும்
30 Mar 2026, 3:40 pm

தேனீக்களைப் போல் ஆர்வமுடன் வாக்குச்சாவடி சென்று வாக்கு செலுத்த வேண்டும்

நாகர்கோவில், மார்ச். 30- சட்டமன்றபொதுத்தேர்தல் அன்று தேனீக்களைப் போல் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக ளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட் மாவட்ட ஆட்சியர் ஆர்அழகுமீனா வேண்டு கோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த இலட்சி னையினை வெளியிட்டு, தெரி விக்கையில்- வருகின்ற சட்டமன்றத் பொ துத்தேர்தலை முன்னிட்டு, வாக்கு ரிமை பெற்ற வாக்காளர்கள் அனை வரும் தங்களது ஜனநாயகக் கட மையை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கின்ற காய்கறிகள், மீன் வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட வைகளை கொண்டு தயாரிக்கப் பட்ட தேர்தல் விழிப்புணர்வு இலட்சி னை மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தவிளம்பர இலட்சினை களை பலா பழத்தின் சுவையினை வெளிப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு சுளையும் இனிப்பாக இருப்பதை போன்று, நம்முடைய ஒவ்வொருடைய வாக்கும் முக்கிய மானதாகும். மேலும் மீன்களை மையப்படுத்தி, நீரின்றி மீன் வாழாது அதுபோன்று வாக்கின்றி ஜனநாயகம் வளராது என்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, திங்க னன்று கன்னியாகுமரி மாவட்டத் தின் புவிசார்குறியீடு பெற்ற தேன் களை மையப்படுத்தி, தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை வெளியிடப்பட்டது. தேனீக்கள் எவ்வாறு ஒரு துளி தேனை யும் வீணாக்காமல், மிகச் சுறு சுறுப்பாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு ஒரு வலிமையான கூட்டினை உருவாக்கி, தித்திக் கின்ற தேன்களை வழங்கின்ற னவோ, அதேபோல் நமது ஜனநாய கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு வாக்காளரும் தேனீக்களைப் போல சுறுசுறுப்புடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். எனது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று எண்ணாமல், ஒவ்வொரு தனிநபரும் தங்களது வாக்கைச் செலுத்த வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை என வீட்டிலேயே முடங்கிவிடாமல், காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்குச்சாவடிக்கு வந்து உங்கள் வாக்கினை செலுத்துங்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கான சாய்வுதள வசதி கள் தயார் நிலையில் உள்ளது. எனவே நமது மாவட்டத்திற்குட் பட்ட அனைத்து வாக்காளர்களும் தேனீக்களைப் போல் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என்றார். . நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமா தேர்தல் விழிப்பு ணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.