தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாகித்ய அகாடமியை விட உயரிய விருதுகளை ஏற்படுத்த வேண்டும்

8 Jan 2026, 2:44 pm
சாகித்ய அகாடமியை விட  உயரிய விருதுகளை ஏற்படுத்த வேண்டும்
<p><strong>சாகித்ய அகாடமியை விட &nbsp;உயரிய விருதுகளை ஏற்படுத்த வேண்டும்</strong></p> <p>சென்னை, ஜன. 8 &ndash; சாகித்ய அகாடமியை விட உயரிய விருதுகளை &nbsp;தமிழக அரசே ஏற்படுத்தவேண்டும் என்று &nbsp;எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்ச்செல்வன் எழுதி பாரதி புத்தகாலயம் பதித்துள்ள முதல் 50 ஆண்டுகள் தமிழ் சிறுகதையின் தடங்கள் (இரண்டாம் அச்சு) எனும் நூல் வெளியீட்டு விழா புத னன்று (ஜன.7) சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்றது. இந்நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வன தலைவர் ஆர்.பால கிருஷ்ணன் வெளியிட தமுஎகச மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பெற்று கொண்டார். அப்போது, ஆதவன் தீட்சண்யா பேசியதாவது: ஒன்றிய ஆட்சியாளர்கள் சாகித்ய அகாடமி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு களைத் தங்களது கட்சி அலு வலகங்கள், துணை அமைப்பு களைப் போல் மாற்றி உள்ள நிலையில், தமிழக அரசு சாகித்ய அகாடமியை விட மதிப்புமிக்க உயரிய விருது களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். முதல் அச்சு சாகித்ய அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், விருது ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு நினைத்தால், இந்திய அளவில் தனித்து வமான மற்றும் மதிப்புமிக்க மாநில விருதைத் தேசிய அளவில் உருவாக்க முடியும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர் கள், இந்திய அளவில் இயங்கும் தமிழ் எழுத்தாளர்கள், அய லகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு உலகின் தொன்மையான தமிழ் மொழியின் பெயரால் விருதுகள் வழங்கப்பட வேண்டும். இதை அரசியல் கட்சித் தலைவர்களிடம் தேர்தல் கோரிக்கையாக &nbsp;வைக்க உள்ளோம். &nbsp;சிறுகதை என்பது வெறும் கற்பனையல்ல சிறுகதை என்பது வெறும் கற்பனையல்ல. அது அச்சு இயந்திரம், செய்தித்தாள்களின் வருகையோடு தொடர்புடைய ஒரு நவீன வடிவம். செய்தித் தாள்களில் காலி இடங்களை நிரப்புவதற்கு வாய்மொழிக் கதைகளே பின்னாளில் சிறுகதைகளானது. தமிழ்ச் சிறுகதை, உலகில் நூற்றா ண்டை கடந்த நிலையில் முதல் 50 ஆண்டுகளின் பய ணத்தை தமிழ்ச்செல்வன் மிகச்சிறந்த ஆய்வாக மேற்கொண்டுள்ளார். 189 புத்தகங்களை ஆய்வு செய்து, 6000 கதைகளின் பின்ன ணியை ஆராய்ந்து 57 எழுத்தாளர்களை இதில் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வில், ஒரு எழுத்தா ளரின் படைப்பை மட்டும் பார்க்காமல் அவர்களின் சமூ கப் பின்னணி, பொருளாதார நிலை, வாழ்விடம், அரசியல் நிலைப்பாட்டை ஆய்வு செய்துள்ளார் என்று ஆதவன் தீட்சண்யா சுட்டிக்காட்டினார். விருது ரத்து &nbsp;வியப்பளிக்கவில்லை உலக தமிழாராய்ச்சி நிறு வனத் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பால கிருஷ்ணன் பேசுகையில், &nbsp;தமிழ்ச்செல்வனின் படைப்பிற்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது ரத்து செய்யப்பட்டிருப்பது வியப்பளிக்கவில்லை. இது நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் மரணமடைந்து வரு கிறது. திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசும் முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், வள்ளு வரின் வெண்மை நிற வேட்டியே தமது அரசியல். தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் தன்வந்திரி புகுத்தப்பட்டதைப் போலவே இந்த விருது மறுப்பையும் பார்க்கின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நிலச்சரிவுக்கு அசைவ உணவுதான் காரணம் என்று ஐஐடி இயக்கு நர் பேசுகிறார். மறுபிறப்பு அவதாரங்கள் குறித்த பாடங்கள் எடுக்கப்படுகிறது. இதுதொடக்கமே தலித் மக்களின் வாழ்வை பேசாமல் விட்ட அல்லது சரியான பார்வையில் பேசாத அரசியல் குறிப்பிட்ட காலம் இருந்தது உண்மை. அதே, பெண்களுக்கு புறச்சுழலில் ஏற்பட்ட மாற்றங்களே தமிழ் சிறுகதைகளில் அகச்சூழலை மாற்றியது. இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாகப் பொதுவுடைமை, திராவிட இயக்க தடங்களை தமிழ்ச்செல்வன் விசாரித்து ள்ளார். ஆகவே விருது மறுக்கப் &nbsp;பட்டிருப்பது ஒரு புதிய உரையாடலின் தொடக்க மாகவே பார்க்கப்படுகிறது. தொல்காப்பியன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் பெயர்களை மாற்றுவதும், அடையாளங்களை மடை மாற்றுவதும் உண்மையான இலக்கியத்திற்கு அங்கீ காரம் மறுப்பதும் வேதனை யளிக்கிறது என்றார். &nbsp;சாகித்ய அகாடமி அதன் படிநிலையை பாதுகாப்பது மிக முக்கியமானது என்று ஏற்புரையாற்றுகையில் குறிப்பிட்ட எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், அதற்காகத் தனது விருதைக் கைவிடவும் நான் தயாராக உள்ளேன். நேரு கொண்டு வந்தார் என்ப தால் ஒழித்துக்கட்டும் வேலை நடக்கிறது. இந்துத்துவா அரசியலின் ஒரு பகுதியாக நேரு எதிர்ப்பு அரசியலை செய்கின்றனர். அறிவிக்கப்பட்ட விருதுகளை ரத்து செய்வது என்பது 24 மொழி சார்ந்த எழுத்தாளர்களையும், ஒட்டு மொத்த சாகித்ய அகாடமியை யும் அவமதிக்கும் செயலாகும். &nbsp;சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகள் தன்னிச்சையாக அறிவிக்கும் விருதுகளையே ஏற்பேன். அரசு அறிவிக்கும் விருதுகளையும் நவபாசிச சக்திகள் வழங்கும் விருதை ஏற்க மாட்டேன். இளைய தலைமுறை வாசகர்களுக்கு தமிழ் சிறுகதைகளின் ஆழத்தையும் செரிவையும் அறிமுகப்படுத்துவதே எனது படைப்பின் நோக்கம். இந்திய மொழிகளிலேயே தமிழ் சிறுகதைகளுக்கு நிகராக வேறொன்றும் இல்லை எனும் அளவிற்கு அதற்குப் பெரும் பாரம்பரியம் உள்ளது. இருப்பினும், தலித் மக்களின் வாழ்வியலை எழுதாமல் விட்டதில் ஒரு நுணுக்கமான அரசியல் உள்ளது. பெண்க ளின் வாழ்க்கையும் இங்கு முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. &nbsp;ஆரோக்கியமான மாற்றம் &nbsp;தற்போது பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்களி லிருந்து கதைகளை எழுத முன்வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும். இலக்கியத்தை முதலில் இலக்கியமாகப் பார்த்து வாசிக்க வேண்டும், அதன் பிறகே அதன் அரசியலை ஆராயவேண்டும். இக்கால கட்டத்திலும் சிறந்த சிறுகதை கள் பல வாசிக்கப்படாமலேயே உள்ளது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் கதைகள் புறக்கணிக்கப்படு வதில் ஒரு மிகப்பெரிய அரசி யல் உள்ளது. நவீன இலக்கி யத்தின் முன்னோடிகள் எனப் படுவோர் பல படைப்புகளை வாசிக்காமலேயே நிராகரித்தார் கள். ஆயி ரக்கணக்கான கதை களை வாசிக்காமலே நிரா கரிக்கும் போக்கு உள்ளது இவ்வாறு அவர் கூறினார். இந்நூலாசிரியர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், தமுஎகச மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சிவ.செந்தில்நாதன் செயலாளர் நா.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் வே.ரவீந்திரபாரதி, பாரதி புத்தகாலயம் மேலாளர் நாக ராஜ், ஊடகவியலாளர் டெல்ஃ பின் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை தமுஎகச மத்திய சென்னை மாவட்டம் நடத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.