கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ!
14 Nov 2025, 1:26 pm
<p><strong>கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ!</strong></p>
<p>ஈரோடு, நவ.14- மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர் சங் கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வியாழனன்று ஈரோட்டில் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த பொதுத்துறை நிறுவனங் களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்தருணத்தில், “பொதுத்துறை பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் மத்திய பொதுத்துறை ஊழி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார் பில் வியாழனன்று சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. மறைந்த முன்னாள் பிரதமர் ஜவ ஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, அரசு ஊழியர் சங்க ஈரோடு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சி.பரமசிவம் வரவேற்றார். “கண்ணீரால் காத் தோம்! கருகத் திருவுளமோ?” என்ற தலைப் பில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.சுரேஷ் கருத்துரையாற்றினார். சகோதர சங்க நிர்வா கிகள் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர். எல்ஐசி ஊழியர் சங்க நிர் வாகி வி.ராஜகோபால் நன்றி கூறினார்.</p>
