தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புகிறோம்! அங்கன்வாடி ஊழியர் சங்கம் எதிர்பார்ப்பு

19 Jan 2026, 2:23 pm
ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு  வெளியிடும் என்று நம்புகிறோம்! அங்கன்வாடி ஊழியர் சங்கம் எதிர்பார்ப்பு
<p><strong>ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு &nbsp;வெளியிடும் என்று நம்புகிறோம்! அங்கன்வாடி ஊழியர் சங்கம் எதிர்பார்ப்பு</strong></p> <p>சென்னை, ஜன.19 - ஜன.27-க்கு முன்பாக ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று &nbsp;நம்புவதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி 313-இன்படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு &nbsp;10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் &nbsp;வழங்க வேண்டும். மே மாதம் முழுமையும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். &nbsp;காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஜன.27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இந்நிலையில் திங்களன்று (ஜன.19) தலைமைச் செயலகத்தில் சமூக நலத் &nbsp;தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் சங்கத் தலைவர் ஏ.பாக்கியமேரி, பொதுச் &nbsp;செயலாளர் எஸ்.தேவமணி, பொருளாளர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய &nbsp;தேவமணி, &ldquo;பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஜன.27 ஆம் &nbsp;தேதிக்குள் ஏற்கத்தக்க அறிவிப்பை அரசு வெளியிடும் என்று நம்புகிறோம். அரசின் அறிவிப்பை பொறுத்து முடிவெடுக்கப்படும்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.