முந்தய பக்கம்

‘‘ரெண்டு கால்வாயில் ஒன்ன காணோம்’’ நீரோட்டம் பாதிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

29 Nov 2025, 4:58 pm
‘‘ரெண்டு கால்வாயில் ஒன்ன காணோம்’’ நீரோட்டம் பாதிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!
<p><strong>&lsquo;&lsquo;ரெண்டு கால்வாயில் ஒன்ன காணோம்&rsquo;&rsquo;நீரோட்டம் பாதிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!</strong></p> <p>காஞ்சிபுரம், நவ.29- காஞ்சிபுரம் மாநகராட்சி வரையறைக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் (44வது வார்டு), சதாசிவம் நகர் மற்றும் சிதம்பரனார் சாலை (43வது வார்டு) பகுதி களில் அமைந்திருந்த இரட்டைக் கால்வாய் அரசு வரைபடங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த இரட்டைக் கால்வாய்களில் ஒன்று முற்றிலும் மறைந்து விட்டது. புறம்போக்கு நிலங்க ளில், நமக்கு நாமே திட்டங் &nbsp;கள் மூலம் தனிநபர் ஒரு வருக்காக அவசரகதியில் புதிய கால்வாய் போன்ற அமைப்புகள் கட்டப் பட்டதில், பழைய கால் &nbsp;வாயின் இடம் மறைக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். ஏற்கெனவே இருந்த கால்வாயின் எதிரே புதிய அமைப்பு கட்டப்பட்டதால், இயல்பான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மூடப் பட்டதன் காரணமாக வர விருக்கும் மழைக்காலங்க ளில் இந்த பகுதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உரு வாகும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். &ldquo;இந்தக் கால்வாய் ஏன் மூடப்பட்டது? யாருக்கு லாபம்? அரசியல் நபர்க ளுக்காகவா அல்லது தனி நபர்களுக்காகவா?&rdquo; என்ற கேள்வியும் அவர்கள் எழுப்புகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram