நாம ஜெயிக்கிறோம் தோழர்!
8 Apr 2026, 5:30 am
<p><strong>நாம ஜெயிக்கிறோம் தோழர்!</strong></p><p>என்.பாண்டியை வாழ்த்திய ஆதரவாளர். பழனி சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு முதியவர் அவரை அணுகி "நாம ஜெயிக்கிறோம் தோழர்" என உற்சாகத்துடன் கூறினார்.</p><p>புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என்.பாண்டி. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் என்.பாண்டி, ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது ஜமாத் நிர்வாகிகள் அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.</p>
