நாம ஜெயிக்கிறோம் தோழர்!
8 Apr 2026, 5:30 am

நாம ஜெயிக்கிறோம் தோழர்!

என்.பாண்டியை வாழ்த்திய ஆதரவாளர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இதொரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என். பாண்டி செவ்வாயன்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, தற்செயலாக அப்பக்கம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான உடையம்மாள், தான் பிடித்திருந்த குடையை வேட்பாளர் என். பாண்டிக்கு பிடித்து நிழல் கொடுத்தார். அப்போது, உடையம்மாள் "நாம ஜெயிக்கிறோம் தோழர்!" என மிகுந்த உற்சாகத்துடன் கூறி ஆதரவைத் தெரிவித்தார்.