எளிய மக்களின் இறுதி நம்பிக்கை நாங்கள் தான்! - செ. முத்துக்கண்ணன்
yesterday

எளிய மக்களின் இறுதி நம்பிக்கை நாங்கள் தான்! - செ. முத்துக்கண்ணன்

“பசித்தவருக்கு உணவு கொடுத்தேன்” என்றதும் என்னை வள்ளல் என்றார்கள். “அவர்களுக்கான உணவு ஏன்கிடைக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியதும் என்னைக் கம்யூனிஸ்ட் என்றார்கள். விளைவுகளுக்கான காரணத்தைத் தேடினால் அதற்குப் பெயர் கம்யூனிசமா? இது நூற்றாண்டுகளாகத் தொடரும் கேள்வி. பசித்தவரிடமும் வறியவரிடமும் சாமானியரிடமும் சென்றோம். “நீங்கதான் பிரச்சினைகளைக் கேட்க வர்றீங்க! வேற சிலரும் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வண்டிஅனுப்புறாங்க, பணம், உணவு எல்லாம் தர்றாங்க. ஆனா நீங்கதான் ‘என்ன பிரச்சினை, மனு கொடுப்போம், நடக்கலைன்னாபோராட்டம் நடத்துவோம்’ எண்டு சொல்லுறீங்க” என மக்களே சொன்னார்கள். போராட்டத்தில் கோஷம் போடும்போது, அதிகாரியிடம் எந்தச் சமரசமும் இன்றி அவ்வளவு அழகாக எங்களைப்பேசச் சொன்னது யார் என்ற வியப்பும் ஆச்சரியமும் அவர்களுக்கே எழுந்தது — தங்கள் வாயால்தாங்களே சொன்ன அந்தச் சொற்களின் வீரியத்தை அவர்களே உணரத்தொடங்கினார்கள். எப்படியும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடி வெற்றி பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றியிருந்தது. தாராபுரம் தொகுதியில் குடிநீருக்காக ஐந்து குடங்களை வண்டியில் வைத்து இழுத்து இழுத்து, 45 வயதுக்குள்ளாகவே கர்ப்பப்பை இறங்கிவிடும் அவலத்தைப்பெண்கள்கொட்டினார்கள். கண்மாய் மதகு திறக்கக் கோரி இரண்டு ஆண்டுகள் கேட்டும் பலனில்லை; கம்யூனிஸ்ட் கட்சி மதகுக்குமாலை அணிவிப்புப் போராட்டம் நடத்தியதும் இரண்டே நாளில் மதகு திறக்கப்பட்டு தண்ணீர்வந்தது. அன்று முதல் செங்கொடி யின் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.இது தாராபுரத்தில் இடதுசாரிகள் செய்துள்ள மகத்தான மக்கள் பணிகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதே கதை தான் மதுராந்தகத்தி லும்! கம்யூனிஸ்டுகளைத் தவிர மக்களின் துயரங்களைப் பற்றி, அதன் ஆணிவேரைபற்றி, அதை எப்படிச் சரி செய்வது என்பதைப் பற்றி பேசுவதற்கு யாரும் இல்லை என்பதை நிதர்சனம்.

வறுமையும் உணவும்

உலகின் பட்டினிக் குறியீடு வரிசைப்பட்டியலில் 123 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு 1.90 டாலருக்கும் (சுமார் ரூ.170) குறைவான வருமானத்தில் வாழ்வோர் இந்தியாவில் சுமார் 7 கோடி பேர் என ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயப் பணிகளில் கிராமப்புறப் பெண் தொழிலாளர்கள் நாளொ ன்றுக்கு ரூ.128மட்டுமே கூலியாகப் பெறுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நுகர்வுச் செலவு ஆய்வின்படி, நாளொன்றுக்கு ரூ.100க்கும் குறைவாகச் செலவிடும் குடும்பங்கள் 34% உள்ளன; உணவுப் பொருள் விலைவாசி கடுமையாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதன் தாக்கம் களத்தில் கடுமையாக உள்ளது.நியாய விலைக் கடைகளில் விநியோகம் தரமற்றதாக உள்ளது; வேறுபொருட்களையும் கட்டாயம் வாங்க வைத்து ரூ.165 வசூலிக்கிறார்கள். மாதத்தில் இரண்டு–மூன்று நாட்கள் மட்டுமே விநியோகம்; 75 மூட்டை அரிசியில் 20–30 மூட்டை மட்டுமே ஓரளவுதரமானது, மீதி தரமற்றது. இத்தகைய அரிசியை மக்கள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவதாகஅமைச்சர்களே சட்டமன்றத்தில் பேசியது வேடிக்கையானது — ஆடும் கோழியும்கூட உண்ணாத அரிசியை மனிதர்களுக்குத்தந்துவிட்டு இப்படிக் கூறுவது மக்களை இழிவுபடுத்துவதாகும். இத்தகைய சூழலில் குறைந்த வருமானமுள்ள கிராமப்புற மக்கள்அரசின் நலத் திட்டங்களையே நம்பி வாழ்கின்றனர்; அதனால்தான் நிலம், வேலை, உணவு என்ற அடிப்படை வாழ்வாதார முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. “மாடாக உழைத்தவர் வாழ்க்கையில் பசி வந்திடகாரணம் என்ன மச்சான், தேடிய செல்வங்கள் வேறொரு இடத்தில் சேர்வதானால் வரும் தொல்லையடி” என்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

உணவுதானிய உற்பத்தியின் உண்மை நிலை

உண்மையில் 2024–25இல் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பு 12.95 பில்லியன் டாலர் என ஒன்றிய அரசே தெரிவித்துள்ளது. 2025–26இல் ஏற்றுமதி 25 மில்லியன் டன் வரை செல்லும் என அமெரிக்க விவசாயத் துறையின் செப்டம்பர் 2025 மதிப்பீடு கூறுகிறது. இந்தியாவின் பிரச்சினை உற்பத்திப் பற்றாக்குறை அல்ல; அதிகப்படியான கையிருப்பும் சேமிப்புத் திறனுமே பிரச்சினை. ஆகஸ்ட் 2026 ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் அரிசிக் கையிருப்பு உலகளாவிய ஆண்டு அரிசி வர்த்தக அளவையே விஞ்சியுள்ளது — ஆண்டு உற்பத்தி சுமார் 150 மில்லியன் டன், உள்நாட்டுதேவை சுமார் 125 மில்லியன் டன், ஏற்றுமதி 22–25 மில்லியன் டன். உபரி உற்பத்தி இருந்தும் கணிசமான மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர்; வெளிச்சந்தையில் உணவுப் பொருள் விலை கட்டுப்படுத்த முடியாத அளவு உயர்ந்து, ஒரு பகுதி மக்கள்அரைவயிற்றுடன் உறங்கச் செல்கின்றனர். உழவர்களின் உற்பத்திப் பொருட்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக ஒன்றிய அரசு சட்டங்களைத் திருத்துவதும், பெட்ரோலுக்கான எத்தனால்தயாரிக்க அதிகளவு உணவு தானியத்தை மடைமாற்றம் செய்வதும் விலை உயர்வுக்குக் காரணமாகின்றன.

கானலாகும் வேலை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி வழங்க வேண்டிய 100 நாள் வேலை கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக வழங்கப்படவில்லை. சில கிராமங்களில் வேலை தொடங்கும் முன் கருவிழிப் படம் அனுப்பச் சொல்கிறார்கள்; பல பெண்களின் கரு விழி ஸ்கேன் இணையத்தில் பதிவாகா ததால், “கருவிழி பதியவில்லை, கைரேகைபதியவில்லை” என்று திருப்பி அனுப்புகிறார்கள். இதற்காக ரூ.40 போக்குவரத்துச் செலவு செய்து வந்துசெல்லும் பெண் தொழிலாளர் களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து, வேலையும் இல்லாமல்,வாழ்க்கையில் வலியும் வேதனை யும் மட்டும் மிச்சமாகும் நிலை இது. ஈட்டிய கூலிக்குச் சம்பளம் போடப் படாமல் 3 மாதமும் ஆகிவிட்டது; விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் இத்தொழிலாளர்கள்.இத்திட்டத்தை விபி ஜி ராம் ஜி என மாற்றி மாநில அரசுகள் 40% நிதிப் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்ற புதியநிபந்தனையை பாஜக அரசு திணித்து, மக்களை மேலும் வறுமைக்குத் தள்ளுகிறது; இத்திட்டத்தில் இந்தியாவின் சராசரி வேலை நாள் 50 நாட்கள் மட்டுமே என அரசு ஆவணங்களே கூறுகின்றன — மீதி 315 நாள் வாழ என்ன செய்வது? தனது “தலைவிதியை” நொந்துகொண்டு, வாழ்க்கை எப்போது விடியுமோ என்ற நம்பிக்கையிலேயே இம்மக்கள்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் இதைக் கண்கூடாக கண்டு கொண்டி ருக்கிறோம்.

மாயமாகும் கூலி

“கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியல” என 1960களின் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரி, இன்றைய தேசத்தின் நிலையையும் சொல்கிறது. கால் வேலை, அரை வேலையில் வியர்வை சொட்டச் சொட்ட உழைத்தாலும் கூலி கிடைக் காமல், அந்தப் பணம் கட்டுக்கட்டாக அம்பானி, அதானி கஜானாவை நிறைக்கிறது. உற்பத்தி மூலதனமும் உற்பத்தி சாதனங்களும் அவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதே இதற்குக் காரணம்; நிதி மூலதனம் அவர்கள் கைகளில் குவிந்துகொண்டே இருக்கிறது. அதற்கு இயைந்தவாறு ஆளும் அரசுகளைத் தனதாக்கிக் கொள்கிறார்கள்; பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக அரசு, தன் எஜமான விசுவாசத்தில் இந்திய மக்களைக் கடும் துன்பதுயரங்களுக்கு உள்ளா க்கும் இந்த வேலைக்குத் தன் முழு செயல்பாட்டையும் அர்ப்பணிக்கிறது. உண்மை ஊதியத்தின் மதிப்பும் கூலி அளவும் தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது; அரசுசார் நிறுவனங் களில் பணிபுரிவோரின் நிலைமை யும் உரிமையற்ற ஒப்பந்த வேலைகளாக மாறி, குறைந்தபட்ச வாழ்க்கைக்கான ஊதியங்களே முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

மக்களின் இறுதி நம்பிக்கை

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஆட்சியாளர்களோ, வெற்றி பெற்ற எம்எல்ஏ, எம்பிக் களை விலைபேசுவதும், பதவி விலகவைப்பதும், குதிரை பேரம் நடத்து வதும் என ஜனநாயகத்தையும் மக்கள் நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலையை கார்ப்பரேட் பின்புலத்துடன் செய்துவருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில், மக்கள் நலன் சார்ந்து களமாடும் இடதுசாரிகளை எதிர்த்து, பணபலமும் படைபலமும் மீடியா பலமும் கொண்ட தவெக–திமுக–அதிமுக அணிகள், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க பிரச்சாரம் செய்கின்றன. ஆம், நேர்மை, உண்மை, மக்கள் நலன், சமரசமற்ற போராட்டம், தியாகம் — இவற்றின் அடையாளமே கம்யூனிஸ்டுகள். மக்கள் கம்யூனிஸ்டுகள் பக்கம் இருப்பதைப் பார்த்துத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனாலும், பசித்த வயிற்றோடும் வறண்ட கிணற்றோடும் வாழும் இந்த மண்ணின் மக்கள், தங்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள்யார் என்பதை மறந்துவிடவில்லை. அந்த நம்பிக்கையே, இன்றும் இடதுசாரிகளின் போராட்டத்திற்கானஉந்துசக்தியாக இருக்கிறது.