தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” : பாஜக கருத்து நிலை சாய்வு - க.சுவாமிநாதன்

7 Apr 2026, 5:38 pm
“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” : பாஜக கருத்து நிலை சாய்வு - க.சுவாமிநாதன்

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” : பாஜக கருத்து நிலை சாய்வு

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” சீமான் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மேடைகளில் நரம்பு புடைக்க பேசுவதும், தேர்தல் அறிக்கை யில் பல ஆளுமைகளின் படங்களோடு இடம் பெறச் செய்துள்ள மேற்கொள்களும் தருகிற பிம்பம் வேறு. ஆனால் அறிக்கையின் முக்கியமான அம்சங்களை ஆய்ந்தால் பாஜகவின் நீண்ட கால இலக்குகளோடு அவை இணைகிற புள்ளிகள் புலப்படுகின்றன.  ஆவண சாட்சியம் தந்தை பெரியாரை திடீர் என்று விமர்சிக்கவும், வசைபாடவும் சீமான் அவர்கள் ஆரம்பித்தது ஒரு குறியீடுதான். சங் பரிவார் ஆதரவு மேடைகளில் ஏற ஆரம்பித்ததும், அங்கே போய் பிராமணக் கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை தகர்ப்பேன் என்றதும் அடுத்த கட்ட நகர்வுதான்.

பாஜக அணியில் உள்ள ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் கூட தங்களின் கல்வி நிலையங்களில் சீமானுக்கு மேடை கொடுப்பதும் பாண்டே போன்றவர்களை அதில் இணைப்பதும் தற்செயலானவை அல்ல.  இந்த சறுக்கல்கள் எல்லாம் கடந்து எவ்வ ளவு தூரம் சீமான் அரசியல் பாஜகவுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது என்பதற்கான ஆவண சாட்சியமே “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமா னவை. எவ்வாறு “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு அறிக்கை” பாஜகவின் அதி காரக் குவிப்பு, பன்மைத்துவ சீரழிப்பு, நாடாளு மன்ற உள்ளடக்கத்தை மாற்றுவது ஆகிய நோக்கங்களுக்கு துணை போகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

“அன்பான சர்வாதிகாரி” ஒன்று, நமது ஆட்சி முறை “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி முறை” என்கிறார். அதற்கு இறக்கும் நிலையில் உள்ள குழந்தைக்கு ஊசி போடுவது போல, ஆசிரியர் குழந்தைக்கு மூன்று முறை எழுதிக் கொண்டு வர பணிப்பது போல,  பனை மரத்தின் மட்டையை கிழித்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுப்பது போல என்றெல் லாம் உதாரணங்கள் தருகிறார்.  “தன்னலமற்ற அன்பான சர்வாதி காரத்திற்கு” உலக அளவில் ஒரு உதார ணத்தை காட்டி இருக்கிறார். சிங்கப்பூர் லீ குவான்  யூ போன்று அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்துவேன் என்கிறார். தனது தாத்தன், பாட்டன் லிஸ்டில் சிங்கப்பூர் தாத்தன் ஒரு வரைத் தேடிப் பிடித்து சேர்த்து இருப்பது தேர்தல் களத்தில் சுவாரசியம்தான்.

லீ குவான் யூ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது; பொது மக்களின் எதிர்ப்பு வடிவங்கள் அனுமதிக்கப்படவில்லை; தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன; அர சியல் எதிரிகளை நீதிமன்றங்களுக்கு அவ மதிப்பு வழக்கு என்ற வகையில் இழுத்தடித்தார்; விசாரணை இல்லாமல் சிறையில் வைத்தார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் லீ குவான் யூ வை விமர்சித்து என்ன செய்யப் போகிறோம்! அதுதான் சீமானின் உத்தி. ஒரு தேசம், ஒரு தலைவர் என்கிற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலையே “அன்பான சர்வாதிகாரி” என்று வழி மொழிகிறார்.

இவர் எப்படி பாஜகவின் எதேச்சதிகாரத்தை உறுதியாக எதிர்ப்பார்? ஜனநாயகம் கேள்விக்குறியாகும் இந்தியச் சூழலில், நவ பாசிச அபாயம் தலை தூக்கியுள்ள நிலையில் “தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்” என்பதெல்லாம் போராட்டத்தின் கூர் முனையை திசை திருப்புவது இல்லையா!  குடியரசுத் தலைவர்  நேரடி தேர்வு இரண்டாவது அம்சம் மேலே குறிப்பி ட்டுள்ள “அன்பான சர்வாதிகாரத்துடன்” தொடர்புடையதே. வரைவின் வார்த்தைகளில், “இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். அவரே நாட்டின் தலைவ ராகவும் உள்ளார். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

இது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. எனவே நாட்டின் குடியரசுத் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும்படியாக தேர்தல் முறை இருக்க வேண்டும்”  வாஜ்பாய் காலத்தில் இருந்து மோடி காலம் வரை பாஜக பேசி வருவதுதான். அதற்கான காலம் கனியவில்லை என்று அவர்களே அடக்கி வாசிக்கும் போது, கனிந்து விட்டதா என்று கல்லெறிந்து பார்க்கும் வேலை சீமான் அவர்களுக்கு எதற்கு என்பது புரியவில்லை.  “மாநிலத்தில் தன்னாட்சி” என்ற முழக்கத்திற்கும், நேரடியாக குடியரசுத் தலை வர் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கே குழி தோண்டுவது ஆகாதா? ஒன்றியத்தில் அதிகாரக் குவிப்பிற்கு வழி வகுக்காதா? பன்மைத்துவத்தை பாது காக்க இது உதவுமா? பாஜக தனியாகத் தோண்டு கிறது என ஒத்தாசை செய்வது அல்லவா இது! “முதல் குடிமகன்” என்ற பாலின பேத சொல்லாடலை பயன்படுத்தி இருப்பது தனி யாக சுட்ட வேண்டிய ஒன்று.

குடியரசுத் தலைவ ராக இரண்டாவது பெண்மணி தற்போது இருக்கிறார் என்பதையாவது வரைவாளர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.  தொகுதி மறு வரையறை மூன்றாவது, மோடி யானை வருவதற்கு முன்பே சீமானின் மணியோசை கேட்டு இருப்பது. வரைவு கூறுவது இது, “விடுதலை அடைந்தபோது மக்கள் தொகை 30 கோடி தான். 1952இல் இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகள் உட்பட 489 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப் பட்டன. ஆனால் இன்று 148 கோடி மக்கள் தொகையாக 2026 இல் பெருகிய பிறகும் 543 நாடாளுமன்ற தொகுதிகள்தான்... மக்கள் தொகை நான்கு மடங்கு உயர்ந்துள்ள நிலை யில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடா ளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும்”.

பாஜக தொகுதி மறு வரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செய்வதன் மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்க முனைகிறது என்ற விவாதம் நாடு முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” மக்கள் தொகையை அளவுகோலாகக் கொண்டே பேசுகிறது என்பது யாருக்கு உதவும்? மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் இடங்கள் என்னவாகும்? இத்தகைய சூழல் உருவாவது மாநிலங்களின் “தன்னாட்சியை” பாதிக்காதா? 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்றுதானே சொல்கிறார் என்று நினைக்கலாம்.

இந்தியா வில் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி என்ற வரை யறை ஓரிரு மாநிலங்களில்தான். எல்லா மாநி லங்களிலும் சீராக இல்லை. ஆகவே அளவு கோல் மக்கள் தொகைதான் என்பதே அவர் கருத்து எனத் தெளிவாகிறது. அது பாஜகவின் விருப்பம் என்பதைத் தவிர வேறென்ன! பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரலுக்கு முன் கூட்டியே கை தூக்குகிறதா “நாம் தமிழர்”. அடிப்படையான அரசியலமைப்பு குறித்த இத்தகைய பார்வையை வைத்துக் கொண்டு வரைவு பிந்தைய பக்கங்களில் அதி காரப் பகிர்வு, ஜனநாயகம் பற்றிப் பேசி  இருப்பதெல்லாம் வெறும் காகித அம்பு கள்தானே! பாஜக கருத்து நிலைகளுடனான சாய்வு, “நாம் தமிழர்” வரைவில் வெள்ளிடை மலை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.